அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்..? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை..!
பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் பிரதமரை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவன தலைவர்களான டாக்டர் ஹெட்கேவார், குருஜி கோல்வல்கர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன், நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும் என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார். அதன்பிறகு அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்ற பிரதமர்,அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ஏன் இந்த ஆர்வக்கோளாறு..? திமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: வெடிக்கும் ஆர்.எஸ்.எஸ்..!
பின்னர் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமரான பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும் பாஜக தலைமைக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தீர்க்கும் விதமாக பிரதமர் மோடி இன்று ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்த ஆலோசனையை முடித்துவிட்டு அங்கிருந்து சோலார் டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விடை பொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு விமான ஓடுபாதை மற்றும் போர்முனை சோதனை வசதிகளை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை பிலாஸ்பூரில் இரண்டு லட்சம் மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.. இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!