உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான்...’ உருகிய ராமதாஸ்... தைலாபுரத்தில் குவிந்த பாமக நிர்வாகிகள்..!
போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதைவிட வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பார்த்துக்கிறது ஒவ்வொரு புள்ளைகளோட கடமை.
அன்புமணி -ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள பகிரங்க மோதல் பற்றி எரிகிறது. இந்நிலையில், இந்த மோதல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸுடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய அவரது இல்லம் அமைந்துள்ள பனையூருக்கு ஒரு குழுவை அனுப்ப முடிவு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்னைகுறித்து பேசி சமரச முடிவெடுக்க தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸை வரவழைத்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.
‘‘அன்புமணி-ராமதாஸ் இடையே உருவாகியுள்ள இந்த மோதல் ஒரு குடும்பத்திற்குள் நடப்பது. இருவரும் உரிமையில் பேசிக் கொள்கிறார்கள். அய்யா, சின்னய்யா வீட்ல கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பாங்க" எனக் கூறுகிறார்கள் பாமகவினர்.
இதையும் படிங்க: பேரனுக்குப் பதவி... அப்பாவுக்கும்- மகனுக்கும் சண்டை... யார் இந்த முகுந்தன்..!
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில் “ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இப்போது வெளிப்பட்டது சலசலப்புதான். இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெற்றோர்களை அவர்கள் வாழும் காலத்தில் பொக்கிஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ராமதாஸ் கடந்த 2022 பதிவிட்ட எக்ஸ் தள பதிவு ஒன்று இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில். ‘‘பிள்ளைகள் நம்மள படைச்சது சாமின்னு சொல்றாங்க. ஆனா, நம்மள படைச்ச உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான். அவங்க போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதைவிட வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பார்த்துக்கிறது ஒவ்வொரு புள்ளைகளோட கடமை. முத்துக்கு முத்தாக என்ற திரைப்படத்தை நான் பார்த்தேன். அந்தப்பத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம்தான் இது. அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம் இது’’ என தெரிவித்துள்ள அந்தக் கருத்து அன்புமணிக்கு உணர்த்துவதால் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமதாஸ் அன்புமணி வார்த்தை போர் .. நான் சொல்வதை தான் கேட்கணும்... அப்பா மகனிடையே மோதல்