×
 

கேட்பாரற்று கிடந்த ரோடு ரோலர்.. லாவகமாக சுருட்டிய மூவர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்!

சென்னை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ரோடு ரோலரை கிரேன் உதவியுடன் லாரிகள் திருடி சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை செனாய் நகரை சேர்ந்தவர் தினகரன். இவர் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு ரோடு ரோலர் மீஞ்சூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ரோடு ரோலரை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக கொண்டு செல்லும்போது சோழவரம் சுங்க சாவடி அருகே ரோடு ரோலர் பழுதாகி உள்ளது.

இதனால் ரோடு ரோலரை சரி செய்து மீண்டும் அலுவலகத்திற்கு எடுத்து செல்லலாம் என நினைத்து சாலையோரம் நிறுத்தி வைத்து சென்றுள்ளனர். இன்னலையில் மாத கணக்கில் அந்த ரோடு ரோலர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி வாகனத்தை சரி செய்து கொண்டு செல்வதற்காக தினகரன் மெக்கானிக்கடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ரோடு ரோலர் காணாமல் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் சோழவரம் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதன் காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. ஜாமின் கோரும் சப்-இன்ஸ்பெக்டர்கள்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

அதில் ஐஷர் லாரி ஒன்றில் ரோடு ரோலர் ஏற்றிச் செல்வது போன்ற காட்சிகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை போலீசார் தீவிரபடுத்தினர். அப்போது அந்த லாரி திருவள்ளுவரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரது லாரி என்று தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், என்ன சம்பவத்தில் தொடர்புடைய கோபிநாத் வெங்கடேசன் ஆகியை மூவரையும் கைது செய்தனர். மேலும் நீண்ட காலமாக கேட்பாரற்று சாலையோரம் கடந்ததால் கிரேன் உதவியுடன் ரோடு ரோலரை லாரியில் ஏற்றி திருடி சென்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதை எடுத்து சோழவரம் போலீசார் மூவரையும் கைது செய்து, திருடப்பட்ட ரோடு ரோலரை மீட்டனர். முன்னதாக திருடுவதற்கு பயன்படுத்திய லாரி கிரேன் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இதையும் படிங்க: ஆட்டோவில் தவறிய I-Pad.. பத்திரமாக மீட்பு.. ஆட்டோ ஓட்டுநற்கு குவியும் பாராட்டுகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share