×
 

நள்ளிரவில் பயங்கரம்.. தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலம்.. கொள்ளையர்கள் காரணமா?

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கண்ணாங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கும் புலியூரை சேர்ந்த 21 வயதே ஆன லாவண்யா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஆதிரன் என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். கணவர் மணிகண்டன் நாக்பூர் மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

வயது பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெரும் எண்ணத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப  தகராறு காரணமாக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கடந்த மூன்று மதமாக குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். புலியூரில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யா நேற்று குழந்தை மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் உறங்கிக் கொண்டு இருந்தார். திடீரென நள்ளிரவில் அலறல் சப்தம் கேட்டுள்ளது. அனைவரும் கண்விழித்து பார்த்துள்ளனர். 

இதையும் படிங்க: இது டீச்சர் வீடு இல்லையா? வீடுமாறி திருடப்போன கொள்ளையர்கள்.. இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!

அப்போது திடீரென குழந்தையை காணவில்லை என கத்தி கூச்சலிட்ட லாவண்யா, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் தனது தாலிச் சங்கிலியை பறித்து சென்றதாகவும், குழந்தையையும் தூக்கி சென்றதாகவும்  உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் வீட்டைச் சுற்றி குழந்தையை தேடி உள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் கிடந்ததைக் கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இது தொடர்பாக கீரனூர் போலீசாரிடம் புகாரின் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில்  கீரனூர் போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவங்கினர். குழந்தையின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் லாவண்யாவை கீரனூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் மணிகண்டன் தரப்பையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா முண்ணுக்குப்பின் முரணாக தகவல்களை கூறி வருவதால்  தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதலில் தமிழில் கையெழுத்துப் போடுங்கள்… திமுகவினரின் மொழிப்பற்றை தோலிரித்த பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share