ஏழைப் பெண்கள் தான் டார்கெட்.. கால் சென்டர் நடத்துவதாக மோசடி.. ஆபாச படம் எடுத்து விற்றவர்கள் கைது..!
ஆந்திராவில் கால் சென்டர் என்ற பெயரில் பெண்களின் ஆபாச வீடியோக்களை தயாரித்து, தடை செய்யப்பட்ட ஆபாச வலைத்தளங்களுக்கு விற்பனை செய்து வந்தவர்களை கருடா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், ஜோஸ்னா. இவர்கள் இருவரும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். அப்போது இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை சேர்ந்த லூயிஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. லூயிஸ் குண்டக்கல்லுவில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர்கள் மூவரும் சேர்ந்து ஈசியாக பணம் சம்பாதிப்பது எப்படி என திடீர் திட்டம் தீட்டினர்.
இவர்களின் கவனம் இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பக்கம் சென்றது. நாம் ஏன்? பெண்களின் ஆபாச வீடியோவை இணையத்தில் விற்க கூடாது? என யோசித்த இந்த மூவர் கூட்டணி, பெண்களின் வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு விற்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர். இதற்காக அப்பாவிப் பெண்களைப் தேடி பிடிக்கத் தொடங்கினர்.
மேலும் கால் சென்டருக்கு வரும் பெண்களை ஆசை வார்த்தைகளால் கணேஷும், ஜோஸ்னாவும் பேசி பேசி, தங்களது வலையில் வீழ்த்துவது வழக்கம். பின்னர் குந்தக்கல்லில் ஒரு ஸ்டுடியோவை வைத்து, தங்கள் வலையில் விழுந்த பெண்களுடன் நிர்வாண வீடியோக்களை எடுத்துள்ளனர். இந்த வீடியோக்களை வெளியிட தடை செய்யப்பட்ட ஆபாச தளமான Xampster என்ற ஆபாச வலைத்தளத்துடன் இணைந்தனர்.
இந்த ஆபாச தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் URL இணைப்புகள் வழியாக பெண்களின் நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு அனுப்பி வந்தனர். இந்த வலைத்தளத்தில் லைவ் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். பெண்களின் நிர்வாண வீடியோக்களையும் லைவ் நிர்வாண வீடியோக்களையும் பதிவேற்றி நிறைய பணம் சம்பாதித்து வந்தனர்.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!
இவர்கள் குறித்து கிடைத்த தகவலால் சைபர் பாதுகாப்பு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில அரசு சைபர் குற்றங்கள், போதை பொருட்கள் கடத்தல் மீது தனி கவனம் செலுத்தி வரும் கருடா தனிப்படை ஐ.ஜி. ரவிகிருஷ்ணா தலைமையிலான போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதில் குந்தக்கல்லில் இருந்து கால் சென்டர் என்ற பெயரில் பணத்திற்காக பெண்களை ஏமாற்றி, அவர்களின் நிர்வாண வீடியோக்களை லைவ் ஒளிபரப்பு செய்ய ஸ்டுடியோவை அமைத்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே Xampster ஆபாச வலைத்தளத்தில் பல வீடியோக்களையும் பெண்களுடன் லைவ் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட கணேஷ், ஜோஸ்னா மற்றும் லூயிஸ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட ஆபாச வலைத்தளத்தில் பெண்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கணேஷ் மற்றும் ஜோஸ்னா ஆகியோர் ஆபாச வீடியோக்கள் மூலம் ₹16 லட்சமும், லூயிஸ் ₹11 லட்சமும் சம்பாதித்ததை சைபர் பாதுகாப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பணம் கிரிப்டோகரன்சியாக வரும். இந்தப் பணம் சைப்ரஸை தளமாகக் கொண்ட டெக்னோயிஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் இவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. பெண்களின் நிர்வாண வீடியோக்களையும், பெண்களுடன் நிர்வாண லைவ் நிகழ்ச்சிகளையும் ஆபாச வலைத்தளங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் இன்னும் அதிகமாக சம்பாதித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்தும் கூடுதலாக, இந்த கும்பலிடம் விசாரணை நடக்கிறது.
எத்தனை பெண்களை சிக்க வைத்து நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளது என்பதைக் கண்டறியும் பணியில் கருடா தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதற்காகவே சைபர் கிரைம் குழுக்களை வலுப்படுத்துகிறோம்.
சைபர் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளது. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு ஐ.ஜி.ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபானம் கொடுத்து நிர்வாணம்.. பள்ளி மாணவனை சிதைக்க பார்த்த காமுகன் மீது பாய்ந்தது போக்சோ..!