×
 

புதுச்சேரி ரவுடிக்கு திருவண்ணாமலையில் ஸ்கெட்ச்.. பதுங்கி இருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. உடன் இருந்தே கொன்ற நண்பர்கள்..!

திருவண்ணாமலை அருகே, கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுச்சேரி ரவுடி ஐயப்பன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 40). திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு, விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுச்சேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.  புதுச்சேரியின் சரித்திர குற்ற பதிவேட்டு பட்டியலில் உள்ள ஐயப்பன், சமீபத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர், ஜாமினில் வெளியே வந்தார். புதுச்சேரி போலீசாரின் கெடிபிடியால் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் வெட்டி கொலை நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக வேட்ட வலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின்  உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதன் காரணமாக அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: என்.ஆர்.காங்கிரஸ் - விஜய்யின் தவெக கூட்டணி..? புதுச்சேரியில் பரபரக்கும் அரசியல் களம்.. அதிர்ச்சியில் பாஜக!!

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) சிவனுபாண்டியன், துணை காவல் கண்காணிப்பாளா் அறிவழகன், காவல் ஆய்வாளா்கள் கோமளவள்ளி, ராஜா ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.இதையடுத்து, இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேட்ட வலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல் மோப்பநாய் வீரா வர வழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

விசாரணையில் இறந்தவர் புதுசேரியை சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் என்றும், இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. புதுசேரி போலீசாரின் கெடிபிடியால் ஐயப்பன், தமிழ்நாட்டில் பதுங்கி இருந்ததும் தெரிந்தது. புதுச்சேரியை சேர்ந்த பிரபல குற்றவாளியான  ஐயப்பன் தினம்தோறும் திருவண்ணாமலை அடுத்த வேலையாம்பாக்கம் கிராமத்தில் சீட்டு விளையாடி வந்துள்ளார். மேலும் பைனான்சியர் என்பதால் அங்கு சூது விளையாடுபவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஐயப்பனின் நெருங்கிய நண்பர்கள் சந்துரு மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு பணம் ரூபாய் மூன்று லட்சம் கொடுக்க ஐயப்பன் கொடுக்க வேண்டி இருந்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் பல்வேறு முறை வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஐயப்பன், வேலையாம்பாக்கம் கிராமத்தில் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். இதனை அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பனின் நண்பர்கள் சந்துரு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் அன்று இரவு வேலையாம்பாக்கத்திற்கு இன்னோவா காரில் வந்தனர். ஐயப்பனை அழைத்து கடனாக வாங்கிய 3 லட்ச ரூபாயை கேட்டுள்ளனர். ஐயப்பன் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஐயப்பனை கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் நீலன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை கோடி பகுதியில் வைத்து ஐயப்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்ததும் தெரிய வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேட்டவலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளிகள் சந்த்ரு மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரை தீவிரமாகவும் தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சிலர் சிக்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்டவலம் போலீசார் ஐயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை... கருத்து தெரிவித்த பிரபல 'யூ-டியூபர்' கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share