×
 

1 மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய புடின்... டிரம்பை விரக்தியாக்க ரஷ்ய அதிபரின் ராஜதந்திரம்..?

அண்டை நாட்டுத் தலைவர்களை விரக்தியடைய வைக்கும் தந்திரம். அது ஒரு நுட்பமான அதிகார நகர்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு பரபரப்பான நாளாக இருந்தாலும் சரி புடினின் வாடிக்கை இது.

இன்று காலை உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை எதிர்பார்திருந்தது.    ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், காலை 9:00  (மாஸ்கோ நேரம் மாலை 4:00 மணி) மணிக்கு தொடங்க  இருந்தனர்.

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்தார்.  புடினின் பாரம்பரிய பாணியில், அழைப்பு காலை 10:00 வரை தொடங்கவில்லை. அதாவது அறிவிக்கப்பட்ட சந்திப்பு நேரத்தை தாண்டி ஒரு மணி நேரம் தாமதமானது. எந்த வித காரணமும் தெரிவிக்காமல் தாமதமான தொடக்க நேரத்தை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

 

அழைப்பு தொடங்கவிருந்த நேரத்தில், புடின் கிரெம்ளினில் இல்லை. மாறாக மாஸ்கோ நேரப்படி மாலை 4:00 மணிக்கு தொடங்கிய மாஸ்கோவில் நடந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் மாநாட்டில் இருந்தார். நிகழ்வின் போது, ​​புடினின் உதவியாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டிரம்புடனான திட்டமிடப்பட்ட அழைப்பு குறித்து நினைவூட்டினார். புடின் ஒரு புன்னகையுடன் அதை நிராகரித்தார்.

இதையும் படிங்க: #BIGBREAKING: வழிக்கு வந்த புடின்..! மோடிக்கு நன்றி.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்..

"அவர் சொல்வதைக் கேட்காதே. அது அவருடைய வேலை. இப்போது டிரம்ப் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்" என்றபோது அறையே சிரித்தது. புடின் மாநாட்டிலேயே இருந்தார். நியமிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் பங்கேற்பாளர்களுடன் கலந்து கொண்டிருந்தார். மாஸ்கோ நேரப்படி மாலை 5:00 மணிக்கு சற்று முன்புதான் அவர் கிரெம்ளினுக்குப் புறப்பட்டார். அதாவது அழைப்பு காலை 10:00 மணிக்குத் தொடங்கும்.

இந்த ஒரு மணி நேர காத்திருப்பு, உலகத் தலைவர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் புடினின் வாடிக்கையான  பழக்கத்திற்குப் பொருந்துகிறது. இது கடந்த காலத்தில் பராக் ஒபாமா, ஏஞ்சலா மெர்க்கல் போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. அண்டை நாட்டுத் தலைவர்களை விரக்தியடைய வைக்கும் தந்திரம். அது ஒரு நுட்பமான அதிகார நகர்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு பரபரப்பான நாளாக இருந்தாலும் சரி புடினின் வாடிக்கை இது. ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற அழுத்தமான விஷயங்களாகக் காத்திருந்த டிரம்பையும், உலகளாவிய பார்வையாளர்களையும் அது சந்தேகத்தில் ஆழ்த்தியது.

அழைப்பின்போது ஏற்பட்ட தாமதத்தை டிரம்ப் நிவர்த்தி செய்தாரா? என்பது குறித்து வெள்ளை மாளிகை எதுவும் கூறவில்லை. கிரெம்ளின் இருந்து இதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பதிலும் ஆச்சரியமில்லை. உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, தான்மட்டுமே சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் போக்கு புடினுக்கு,  நிச்சயமாகப் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அதை நினைவூட்டுகிறது. பேச்சுவார்த்தையின் விவரங்கள் இரகசியமாகவே உள்ளன. ஆனால், அதற்கு முன்பு நடந்த காத்திருப்பு மட்டுமே நிறைய விஷயங்களைப் பேசுகிறது.


இரு உலகத் தலைவர்களும் இறுதியில் செவ்வாயன்று ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அமெரிக்க ஜனாதிபதியும், அவரது குழுவினரும் கோரிய உக்ரைனில் 30 நாள் போர்நிறுத்தத்தை டொனால்ட் டிரம்பிற்கு வழங்க புடின் மறுத்துவிட்டார் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மட்டுப்படுத்த மட்டுமே புடின் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: முடிவுக்கு வரும் உக்ரைன் ரத்தக்களரி..  மாஸ்கோவுக்கு தூதுவர்களை அனுப்பும் ட்ரம்ப்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share