தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!
டெல்டா மாவட்டங்களில் மார்ச் ஒன்றாம் தேதி வரை கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 12 மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 26 ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இன்று முதல் மார்ச் மூன்றாம் தேதி வரை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 12 மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கனமழை எச்சரிக்க விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணங்களை துரிதப்படுத்தவும், தண்ணீர் தேங்கும் இடத்தில் மக்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
இதையும் படிங்க: அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?