ஏடிஎம் யூசர்களுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி!!
இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு ஏடிஎம் இருந்து பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
வங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வங்கிகள் வைத்திருக்கும். அந்த வகையில் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்துவதிலும் சில விதிமுறைகள் உள்ளன. அதவாது, நீங்கள் ஒரு மாதத்தில் 5 முறை ஏடிஎம் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்குபின் ஏடிஎம் இருந்து பணம் எடுத்தால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
வேறொரு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 இலவச பரிவர்த்தனைகளையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 இலவச பணம் எடுத்துக்கொள்ளலாம். இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்த கட்டணத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்.. அதிரடி காட்டிய போக்குவரத்து போலீசார்
அதன்படி, எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் இதுவரை வசூலிக்கப்பட்ட தலா 21 ரூபாய் கட்டணத்தை தற்போது 23 ரூபாயாக உயர்த்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
மேலும் இது வரும் மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல முறை ஏடிஎம்மில் பணம் எடுக்கும் அல்லது வேறு எந்த சேவையையும் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் கவலையை கொடுப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் அப்செட் ஆகியுள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த ஆம்னி.. துரித முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு