×
 

நாயின் விலை ரூ.50 கோடியா? புருடா விட்ட பிரபலம்.. அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்..!

பெங்களூரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாக கூறிய தொழிலதிபரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). அவரே தன்னை இந்திய நாய்கள் இனவிருத்தி சங்க தலைவர் என கூறி கொள்கிறார். இந்நிலையில் சதீஷ் சமீபத்தில் ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட போது, தான் அரிய வகை உல்ஃப் டாக் (wolf dog) என்ற இனத்தை சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நாயின் மதிப்பு 50 கோடி ரூபாய் என்றும், உலகிலேயே அதிக விலைக்கு தான் அந்த நாயை வாங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த உல்ஃப் டாக் வகை நாய் Tibetan Mastiff மற்றும் Caucasian Shepherd இனத்தின் கலப்பினமாகும். உலகிலேயே அதிக விலைக்கு நாய் வாங்கியுள்ளதாக சதிஷ் கூறியதை தொடர்ந்து, சதீஷ் மிகவும் பிரபலம் அடைந்தார். 

ஒரே நாளில், நாடு முழுதும் அவரது பெயரும், நாயின் படமும் பிரபலமானது. இதை பயன்படுத்தி நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு இந்நாயை கொண்டு வருமாறு அழைப்புகள் வந்தன. இதையடுத்து, 30 நிமிடம் நிகழ்ச்சிக்கு 2.46 லட்சம் ரூபாயும்; அதற்கு மேல் நடக்கும் நிகழ்ச்சிக்கு 10 லட்சம் ரூபாயும் கட்டணம் வசூலித்து வந்தார். காக்கேசியன் ஷெப்பர்ட் நாய்கள் பொதுவாக பாதுகாப்பிற்காக வளர்க்கப்படுகின்றன. அவை வலிமையான உடல் அமைப்பைக் கொண்டவை. ஒகாமி நாய் ஓநாய் போல தோற்றமளிப்பதால் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். 

இதையும் படிங்க: இதுக்குதான் கே.என். நேரு வீட்டில் ED ரெய்டு நடந்துச்சா.? திமுகவின் கூல் ரியாக்‌ஷன்..!!

இந்த நிலையில் தன்னிடம் உள்ள 9 ஏக்கர் பங்களாவில், பல்வேறு அரிய வகை நாய்களை வைத்திருப்பதாகவும் இஷ்டத்திற்கு அளந்துவிட்டார். விலை உயர்ந்த நாய்களை கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாகவும், வீட்டை சுற்றிலும் 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளதாகவும் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். நாய்களை பராமரிக்கும் செலவு, அதற்கான வசதிகள், தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளுக்கெல்லாம் நாளொன்றுக்கு எவ்வளவு செலவாகும் என மக்கள் கணக்கு போட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இவரது பேச்சில் அமலாக்கத்துறையினருக்கு பொறி தட்டியது. 50 கோடி ரூபாயை இவர் எந்த வழியில் கொடுத்து நாயை வாங்கி இருப்பார். அதற்கான வருமானம் எப்படி வந்தது என அமலாக்கத்துறையினர் நோண்ட ஆரம்பித்தனர். அவரது வீட்டிற்கு ரெய்டு சென்றனர்.

நேற்று காலை அமலாக்கத் துறையினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் 50 கோடி ரூபாய் கொடுத்து, இந்த நாயை வாங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா என்று அவரிடம் விசாரித்த போது, 50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியதாக கூறியது பொய் என கூறியுள்ளார்.

மேலும் அந்த நாய் தன்னுடையது அல்ல என்றும் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது. அது வெளிநாட்டு நாய் இல்லை, இந்திய இனம்தான். அதன் விலை ரூ 1 லட்சத்தை விட குறைவானது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் பொய் தகவல் பரப்பியது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோகுலம் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share