×
 

அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவரா? டெல்லி சட்டசபையில் அமளி: அதிஷி - 10  எம்எல்ஏக்கள் 'சஸ்பெண்ட்'

டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை இடைநீக்கம்

டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து பேரவைத் தலைவர் விஜயேந்தர் குப்தா  உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும்ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினார்கள்.

எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 11 எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி "குடுமி பிடி" சண்டை; கெஜ்ரிவாலுக்கு, பெண் வேட்பாளர் அல்கா லம்பா சவால்

இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதால் சபாநாயகர் தங்களை சஸ்பெண்ட் செய்ததாக குற்றம் சாட்டினார். 

இது பற்றி அதிசய கூறும் போது முதல்வர் அலுவலகத்திலும் அமைச்சர்கள் அலுவலகத்திலும் அம்பேத்கரின் உருவப்படத்தையும் பாஜக மாற்றி வைத்துள்ளது அம்பேத்கரை விட மோடி பெரியவரா அம்பேத்கரின் உருவப்படம் அதனிடத்தில் வைக்கப்படும் வரை நாங்கள் அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பாஜக விளக்கம் 

தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பாஜகவினர் நேற்று விளக்கமளித்திருந்தனர்.

முந்தைய ஆட்சியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் தற்போது முதல்வர் இருக்கைக்கு வலப்புறச் சுவற்றில் மாற்றப்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா கேட்டில் தாமரை… டெல்லிக்கு வருகிறது பாஜக..! தலைநகரில் உதித்த புதிய முத்திரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share