×
 

போலீஸ் மீதே... போலீஸ் நிலையத்திலேயே புகார் கொடுத்த சவுக்கு சங்கர்...!

ஒருமுறை கைது செய்யப்பட்ட போது தன்னிடமிருந்து பறிமுதல் செய்த ஆப்பிள் Airpod-யை போலீசார் திருப்பித் தரவில்லை என போலீசார் மீதே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக அரசையும், காவல்துறையையும் யூடியூப் மூலம் விமர்சித்து வரும் சவுக்கு சங்கர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார். அப்படி ஒருமுறை கைது செய்யப்பட்ட போது தன்னிடமிருந்து பறிமுதல் செய்த ஆப்பிள் Airpod-யை போலீசார் திருப்பித் தரவில்லை என போலீசார் மீதே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கஞ்சா சப்ளை செய்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றம் சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகதால் ஆத்திரமடைந்த நீதிபதி சவுக்கு சங்கருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். 

இதையும் படிங்க: "நேதாஜியின் மையும் இந்தியாவுக்காக ரத்தம் சிந்தியது" : இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை புகழாரம்

இந்த உத்தரவு சென்னை மாநகர காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சவுக்கு சங்கரை கைது செய்த தேனாம்பேட்டை தனிப்படை போலீஸார் அவரை  தேனி மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, நேற்று ஜாமீனில் வெளியான சவுக்கு சங்கர் முதல் வேலையாக தியாகராய நகரில் உள்ள காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

17 டிசம்பர் 2024 அன்று, என்னை கைது செய்தபோது என்னிடம் இருந்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் Apple airpod பறிமுதல் செய்தார்.

அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை. அதை திருப்பியும் தரவில்லை என்பதால், என்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பெட்டை காவல் உதவி ஆணையர்… pic.twitter.com/C057MqQ511

— Savukku Shankar (@SavukkuOfficial) January 23, 2025

டிசம்பர் 17ம் தேதி நடந்த கைது நடவடிக்கையின் போது, தன்னிடம் இருந்த Apple airpod-யை தேனாம்பேட்டை உதவி ஆணையர் பறிமுதல் செய்ததாகவும், அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் அதனை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கவே இல்லை என்றும், தன்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்து, அதை மீட்டுத் தரும்படியும் புகார் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? - ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.பி.உதயகுமார்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share