விசாரணை நேர்மையாக நடக்காது.. குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கின்றனர்.. ஆவேசமான சவுக்கு சங்கர்..!
தனது வீட்டின் மேல் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 100% சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் தனது தாயுடன் வசித்து வரும் பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கரின் வீட்டில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மலம் கலந்த கழிவு நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாய் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த நிலையில் காவல் ஆணையர் மற்றும் சிலர் மீது குற்றச்சாட்டை வைத்த உள்ளனர் அதனால் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்த சில நிமிடங்களிலே அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி அன்புவை நேரில் சந்தித்து புகார் அளிப்பதற்காக சவுக்கு சங்கர் வந்தார்.
அப்போது ஐ.ஜி அன்பு அலுவல் பணியின் காரணமாக சவுக்கு சங்கரை சந்திக்க முடியாததால் டி.எஸ்.பி-ஐ சந்தித்து இந்த வழககு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..!
சென்னை காவல்துறை இந்த வழக்கை CBCIDக்கு மாற்றும் போதே என்க்கு சந்தேகம் வந்தது. CBCID யும் இந்த வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளேன். குற்றவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்க சிபிசிஐடி ஈடுபடுகிறது.
வாணி ஸ்ரீயை கைது செய்தாலும் பிணையில் செல்வப் பெருந்தகை வெளிவருவார். உறுப்பினராக இருப்பதால் தான் இச்சம்பவத்தில் ஈடுபட வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது, காவல்துறைக்கு தெரிந்தே தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை அனுமதி வாங்கிக்கொண்டு தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது ஆறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆனால் சில முக்கிய வழக்கு House break உள்ளிட்ட சில பிரிவுகள் சேர்க்கவில்லை. 1500 துப்புரவு பணியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளர்களாக இருக்கிறார்கள். 100% சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை.
ஐஜி வேலையாக இருப்பதால் டி.எஸ்.பியிடம் தெரிவித்துள்ளேன். ஒருவரை தவிர வேறு யாரும் துப்புரவு பணியாளர்கள் இல்லை, அனைவரும் தூண்டுதலின் பேரில் வந்த கூலிப்படைகள், துப்புரவு பணியாளர்கள் என்ற போர்வையில் வந்துள்ளனர். நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடக்க வேண்டும். என விரும்புகிறேன் என பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!