மச்சானுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி: சவுக்கு சங்கரின் டார்க்கெட்: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!
இந்தியாவையே நான் தான் முடிவு செய்கிறேன் என்கிறார். எல்லா தொழிலையும் நான் தான் முடிவு செய்கிறேன் என எல்லாம் பேசுவார்.
தன் வீட்டில் மலம் வீசியது தொடர்பாக செல்வப்பெருந்தகை மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து இருந்தார் சவுக்கு சங்கர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், செல்வப்பெருந்தகையின் தூண்டுதலின் பேரில்தான் கமிஷனர் அருண் மூலம் எனது முகவரியை அறிந்து துப்ப்ரவு தொழிலாளர்கள் என் வீட்டில் மலம் வீசியதாக சவுக்கு சங்கர் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைகை, ''இந்த சம்பவத்தை நான் ஏற்கனவே கண்டித்திருக்கிறேன், கண்டிக்கிறேன். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை. இவ்வளவு காலமாக மலத்தை அள்ளிவிட்டு, மல வாசனையுடன் சாப்பிடுவதும், மல வாசனையோடு பால் கொடுப்பதும் மாறி, முதலமைச்சர் இந்தியாவிலேயே இல்லாத ஒரு அற்புதமான திட்டத்தை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: 'அந்த என்கவுண்டர்... ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு..?' - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
இதில் தவறு என்று ஏதாவது இருந்தால் தகுந்த அதிகாரிகளிடம் முறையிடலாம், அல்லது நீதிமன்றத்தில் முறையிடலாம். உண்மை வெளிக் கொண்டு வரலாம். அதில், மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த மக்களைப் பற்றி கொச்சைப்படுத்துவது, குடித்துவிட்டு தூங்குகிறார்கள், குடித்து விட்டு படுத்துக் கொண்டிருக்கிறார்கள், இவர்களெல்லாம் தகுதியற்றவர்கள், மலம் பார்ப்பவர்கள் என்று இப்படியெல்லாம் பேசக்கூடாது.
என் மீது கூறிய (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு) குற்றச்சாட்டு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். சட்டத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதலுக்குச் சென்ற யாரும் காங்கிரஸ் கட்சியில் இல்லை. எங்கே உறுப்பினர் கார்டு இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். அந்த பெண் காங்கிரஸில் இருக்கிறார் என்றால் உறுப்பினர் கார்டு கொடுக்க சொல்லுங்கள். கார்ப்பரேஷன் காண்ட்ராக்ட் நான் எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் கொடுங்கள், வழக்கு தொடருங்கள்.
என்னை குற்றம் சாட்டுவதற்கு அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது. நான் மாநில தலைவராக இல்லை என்றால் அவருக்கு வேண்டிய ஒருவரை கூட்டி வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நல்ல முயற்சிதான். எடுக்கட்டும். கட்சி தலைமை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்னை இந்த பதிவில் இருந்து நீக்கி விட்டால் இல்லாதது, பொல்லாதது எல்லாம் சொல்லி என் மீது கலங்கம் சுமத்தினால் அவருக்கு வேண்டிய ஒருவரை இந்த பதவியில் உட்கார வைக்க அவர் முயற்சிக்கிறார். இதுதான் அவரது செயல் திட்டம். அவர் செயல் திட்டம் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்.
இங்கு என்ன நடக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கிற மக்களுக்கும் தெரியும், தமிழ்நாட்டில் இருக்கிற தலைவர்களுக்கும் தெரியும், டெல்லியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும். எல்லா சதியும் சொல்வார். இல்லாவிட்டால் ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தார்? எல்லாம் பேசுவார். இதைவிட நிறைய பேசி இருக்கிறார். இந்தியாவையே நான் தான் முடிவு செய்கிறேன் என்கிறார். எல்லா தொழிலையும் நான் தான் முடிவு செய்கிறேன் என எல்லாம் பேசுவார்.
அவர் என்னை அட்டாக் செய்ய வேண்டும். இதன் மூலமாக ஏதாவது கிடைத்தால் காய் நகர்த்தி என்னை அகற்றிவிட்டு அவருக்கு வேண்டியமானவரை கொண்டு வர வேண்டும். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. மலம் வீசியதை நான் கண்டித்து இருக்கிறேன். இதை யாரும் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை கண்டிக்கிறது. காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. தலைவராக இருக்கக் கூடிய நான் இதை கண்டித்து இருக்கிறேன். ஆகையால் அவரது செயல் திட்டத்தை அவர் நிறைவேற்றி இருக்கிறார். என்னை திட்டி அவருக்கு பணம் கிடைக்கிறது என்றால் வாழ்த்துக்கள். நன்றாக சம்பாதிக்கட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில், சவுக்கு சங்கரின் சகோதரி கணவர். ஆகையால் அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக கொண்டு வரும் நோக்கில் தன் மீது சவுக்கு சங்கர் குற்றம்சாட்டுவதாக மறைமுகமாதத் தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை.
இதையும் படிங்க: இதுக்கா கருப்பு கொடி காட்டுவீங்க? இதுக்கு மட்டும் பாஜக போராடுமா..? கருப்பு கொடியால் கடுப்பான செல்வப்பெருந்தகை..!