15 வயது சிறுமியை சிதைத்த சித்தப்பா.. மனமுடைந்த மாணவி... தோழியால் வெளிவந்த உண்மை..!
உதகையில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சித்தப்பா உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். தந்தை இறந்துவிட்டதால் தாயாரின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்துள்ளார். சிறுமி அவ்வப்போது அவரது சித்தப்பா வீட்டிலும் தங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன்படி கடந்த ஜனவரி 24ம் தேதி சிறுமி அவரது சித்தப்பாவின் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியின் சித்தப்பாவே, சிறுமியிடம் அத்துமீறி உள்ளார். சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். மன உளைச்சலிலும் தவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிறுமி தனது பாட்டி ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்றுள்ளார். திருவிழாவில் 25 வயது நபரை சிறுமி சந்தித்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன அந்த நபர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி மயக்கி உள்ளார். பின்னர் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியை அந்த வாலிபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று வாலிபர் மிரட்டியதால் சிறுமி இதனையும் மறைத்ததாக தெரிகிறது. இதற்கு சில தினங்களுக்கு முன்பு, சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவரும் சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்.. கூச்சலிட்ட மாணவியின் கழுத்தை அறுத்த கும்பல்..!!
இந்நிலையில் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு உடல்நிலை மோசமானது. பள்ளியில் தொடர்ந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது தோழி, சிறுமியிடம் விசாரித்துள்ளார். தயக்கத்துடனே தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து சிறுமி விவரித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தோழி, இதுகுறித்து பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். உடனே பள்ளி ஆசிரியை சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து, சிறுமிக்கு நேர்ந்த அநீதி குறித்து விவரித்துள்ளார்.
அதன்பேரில் ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரணை துவங்கினர். சிறுமியின் சித்தப்பா, சிறுமியின் பாட்டி ஊரைச் சேர்ந்த 25 வயது நபர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 85 வயது முதியவர் தற்போது உடல்நலமில்லாமல், படுத்த படுக்கையாக உள்ளார். அவரை கைது செய்ததும் இறந்துவிட்டால் என்ன செய்வது என போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியிடம் சொந்த தாய் மாமனே அத்துமீறிய அவலம்..! குட் டச், பேட் டச் நிகழ்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை..!