×
 

மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி தஹவூர் ராணா நாளை புதுடெல்லி அழைத்து வரப்படுகிறார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானை பூர்வீமாகக் கொண்ட தீவிரவாதி தஹவூர் ராணா நாளை அமெரிக்காவில் இருந்து புதுடெல்லி அழைத்து வரப்படுகிறார். புதுடெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ராணாவை ஆஜர்படுத்த திட்டமிட்டிருப்பதால், அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாட்டியாலா நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையும், டெல்லி போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தவிதமான அசம்பாவிதமும் நாளை நடக்காமல் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடும், நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள் கடும் பரிசோதனைக்குப் பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

இதையும் படிங்க: மும்பை தீவிரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்..!

பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்படுத்தப்பட்டவுன் இந்த வழக்கை தேசிய விசாணை முகமை(என்ஐஏ) விசாரணைக்கு எடுக்கும் எனத் தெரிகிறது. ராணாவை திஹார் சிறையில் அடைக்கவே போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக திஹார் சிறையில் பிரத்யேக அறை  தயார் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது, ராணா தங்கியிருக்கும் சிறை வார்டும் கடும் பாதுகாப்பு, கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராணாவை ஆஜர்படுத்தி, அவரை நீதிமன்றக் காவலுக்குப்பின் எத்தனை நாட்கள் விசாரணைக்கு எடுப்பது குறித்து இதுவரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

தஹவூர் ராணா குறித்த வழக்கில் ஆஜராக மத்திய அரசு நரேந்திர மான் எனும் சிறப்பு வழக்கறிஞரை நியமித்துள்ளது. மும்பை தீவிரவாத் தாக்குதல் தொடர்புடைய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராணா குறித்த வழக்கை நரேந்திர மான் ஆஜராகுவார். 64 வயதான தஹவூர் ராணா பாகிஸ்தானில் பிறந்து, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர். 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணா மூளையாக இருந்து செயல்பட்டு பல்வேறு உதவிகளை செய்தவர். இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு மூளையாக இருந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மெனுக்கு உதவியாக தஹவூர் ராணா இருந்தார். 

ராணாவை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் இந்திய அரசு  எடுத்தது. ஆனால் இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ராணாவை இந்திய அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மும்பை 26/11 தாக்குதல்: டெல்லிக்கு அழைத்து வரப்படும் தஹாவூர் ராணா..! அம்பலமாகும் பாகிஸ்தான் தொடர்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share