×
 

வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்ச மாதிரி கதறுறீங்க... நாதக மகளிரணி முன்னிலையில் சீமான் சர்ச்சை பேச்சு...! 

என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க என சீமான் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க என சீமான் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

நான் தலைமறைவாகிட்டேனா?

அழைப்பாணை யாருக்கு எனக்கு, நான் எங்க இருக்கேன்னு தெரியுமா தெரியாதா தெரியும். ஏற்கனவே மூணு நாளைக்கு முன்னாடி வந்து வீட்ல அழைப்பாணை வந்து கொடுத்தீங்க. அப்பலாம் ஊடகத்தை அழைத்துச்சிட்டு வரல. கட்சி வேலைக்காக பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என ஏற்கான்வே விளக்கம் தந்தேன். ஒரே வழக்கு அதற்காக ஏற்கனவே காவல்நிலையத்தில் 3 மணி நேரம் விளக்கம் கொடுத்திருக்கேன். அதையே தான் திருப்பி, திருப்பி கேட்கிறீங்க. நீதிமன்றம் வந்து மூணு மாசம் அவகாசம் கொடுத்திருக்கு, அதுக்குள்ள நீங்க வந்து விசாரிச்சு அதை தாக்கல் செய்யணும் மூணே நாள்ல முடிக்கணும்ங்கிற அந்த அவசரம் அந்த வேகம் காட்ட வேண்டிய தேவை என்ன இருக்கு?. நான் ஓசூரில் இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். அந்த அம்மாவை பெங்களூருவில் போய் விசாரிச்சிட்டு வர்ற நீங்க, என்னை மட்டும் ஏன் காவல்நிலையத்துக்கு வா வான்னு கூப்பிடுறீங்க. 

இதையும் படிங்க: சம்மனை கிழிக்கச் சொன்னதே நான் தான்... முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்..! - கயல்விழி

ஊடகம் வந்தது எப்படி? 

நீங்க என் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஊடகம் வந்து நிக்குது, எல்லா தொலைக்காட்சியும் வந்து நிக்குது. வளசரவாக்கம் போலீசார் அழைப்பாணையை ஒட்டுனதோட உங்களோட வேலை முடிஞ்சிது. நீங்க எதுக்கு கதவுல ஒட்டிட்டு போறீங்க. வீட்ல நிறைய பேர் இருக்காங்க, என் மனைவி இருக்காங்க அவங்ககிட்ட கூப்பிட்டு கொடுத்திருக்கலாம். ஏன்னா அழைப்பாணை வாங்கும்போது கையெழுத்துடனும் நீங்க ஒட்டிட்டு போனா நான் கையெழுத்து போடலைன்னு ஆகும். அது தேவையில்லைன்னா அவங்ககிட்ட குடுத்துட்டு போயிருக்கலாம்ல. நீங்க ஒட்டுனீங்கன்னா இப்ப எனக்கு பதிலா கதவு வந்து உங்களுக்கு விளக்கம் தருமா? எப்படி நீ கதவுல ஒட்டிட்டு போறது நோக்கம் என்ன. நான் இல்ல தலைமறைவு ஆயிட்டேனா, வேற எங்கேயும் என்னை தொடர்பு கொள்ள முடியாத தூரத்துக்கு போயிட்டேனா?. ஒட்டுற இடத்துல எதுக்கு ஊடகம் வருது?. ஒட்டினதும் உன் வேல முடிஞ்சிபோச்சி, அதை நான் கிழிக்கிறேன், கிழிக்காம போறேன் அதுல உனக்கு என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். 

ஏற்கனவே விளக்கம் அளிச்சிருக்கேன் மறுபடியும் வருவேன்றேன் இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம் அடையறீங்க. அந்த அழைப்பானை நான் படிக்கவா நாட்டு மக்கள் படிக்கவா?. இல்ல அதை அப்படியே வச்சு, கட்டம் போட்டு பூஜை அறையில் மாட்டிக்கணுமா?. என் காவலாளி அடிச்சதுல அவங்களுக்கு கீறல் பட்டுடுச்சாம், நீங்க அடிச்சதில் அவருக்கு காயம் பட்டு இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை தேர்தல் வருது பலமுறை ஆட்சிகள் மாறுதுங்கிறதை மறந்துட்டு. இவங்களே அந்த அந்த நாற்காழியில அப்படியே நிரந்தரமா பசையை போட்டு ஒட்டுன மாதிரி, நம்ம கீழே இறங்கவே போறதில்லைங்கிற திமிர்ல ஆடுற ஒரு ஆட்டம் இது எனத் தெரிவித்தார். 

கற்பழிச்சேனா? - சீமான் ஆவேசம்: 

என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்குன்னு சொல்லுறீங்க. ரெண்டு பக்கமும் சரியாக விசாரிக்க வேண்டும். என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. இதே சீமான் இயக்குநராக இருக்கிறேன். படம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் என்றிருந்தால், இந்த வழக்கை இப்படி பேசுவீர்களா?. ஒட்டுமொத்த அதிகாரமும் என்னை சமாளிக்க முடியாததால், கருத்தியல் ரீதியாக மோத முடியாததால் ஒவ்வொரு முறையும், ஒரு பொம்பளையைக் கொண்டு வந்து நிறுத்துறீங்க என சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். சீமானின் இந்த கருத்தை மகளிரணி நிர்வாகிகள் புடைசூழ பேசியிருப்பது சோசியல் மீடியாவில் விமர்சனமாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: சீமான் வீட்டில் போலீஸாருக்கு காத்திருக்கும் ஷாக்… கயல்விழியின் செம ஐடியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share