அண்ணாமலை முன்பு பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சீமான்.. என்ன சொன்னாரு தெரியுமா?
பிரதமர் மோடி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அமித்ஷாவும் ஏற்கனவே தெரிவிருந்தார்.
இதனிடையே அதிமுக – பாஜக கூட்டணியில் சீமானையும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் சீமானும் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
ஆனால் அதனை சீமான் மறுத்துவிட்டார். இந்த நிலையில் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தரின் தமிழ் பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டனர். பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் சீமானும் அண்ணாமலையும் ஒரே மேடையை இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போர்க்களத்தில் நிற்கும் தளபதி… சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!
பின்னர் மேடையில் பேசிய சீமான், இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு பின் உருவான மொழி ஆங்கிலம். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்கிறது. ஆங்கிலத்தில் என்ன சிறப்பு உள்ளது. உலகத்தில் அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்கள் மொழிகளின் தாய் மொழியில் பேசுகிறோம். அனைத்து மொழிகளையும் கற்ற பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியிருக்கிறார்.
தாய்மொழி தெரியாமல் எவ்வளவு மொழி கற்றாலும் நீ அறியவற்றவன் தான். தாய்மொழியை தெளிவுற கற்றால், பிற மொழிகளை எளிதாக கற்கலாம். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் மோடி பரப்பி வருகிறார். உலகின் முதன்மை மொழி தமிழ் எங்கள் நாட்டில் இருக்கிறது என பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் குறிப்பிடுகிறார். தமிழ் எங்கள் நாட்டில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும்போது பிரதமர் கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அறநிலையத்துறை இல்ல அரமற்ற துறை..! ஊழலில் ஊறிக் கிடப்பதாக சீமான் ஆவேசம்..!