×
 

நான் எப்படி சும்மா இருக்க முடியும்..? அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் செங்கோட்டையன் ஆவேசம்

அம்மாவை பற்றி விமர்சனம் செய்து பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சும்மா இருக்கலாமா?

கச்சத்தீவு தீர்மானத்தின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியதால் செங்கோட்டையன் ஆவேசமடைந்துள்ளார்.
 
''அம்மாவை பற்றி விமர்சனம் செய்து பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சும்மா இருக்கலாமா? என கத்தினார் செங்கோட்டையன்

 

இதையும் படிங்க: டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி..?

சட்டப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். அதில், “கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக என அனைத்து கட்சியும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதற்கிடையே இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை ஒரு சில கருத்துகளைப் பகிர்ந்தார்.

அப்போது அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து செல்வப்பெருந்தகை தவறாக விமர்சித்துப் பேசுகிறார்.இதனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாமா? எனவே அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவியுங்கள்” எனக் கூறினார். இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை  பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share