மாயமான மாணவர் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..? என விசாரித்து வரும் போலீசார்
கரூர் அருகே கிணற்றிலிருந்து கல்லூரி மாணவர் சடலம் ஒரு மாதத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு முதல் அருண்குமார் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக அவரது பெற்றோரும் உறவினர்களும் மாணவராக அருண்குமாரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தொடர்ந்து அவரது பெற்றோரும் போல சாரும் அருண்குமாரை வீடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அருண்குமார் வீட்டில் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் அவரது காலணிகள் கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரவுத் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தேடியுள்ளனர். சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், மாணவர் அருண்குமாரின் உடலை சடலமாக தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: உலகின் அழகான 'வங்கி நோட்டு' எது? முதல் பரிசை தட்டிச் சென்ற ஐக்கிய அரபு அமீரகம்..!
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கினர். நண்பர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவர் ஒருதலையாய் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்பதனால் மனவேதனையடைந்த அருண்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது மட்டும் இன்றி ஒரு மாதமாக அருண்குமாரின் செல்போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அருண்குமாரின் இறப்பில் ஏதேனும் மர்மம் இருப்பதாக தெரிவித்த போலீசார் தொடர் விசாரணைக்கு பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேடையிலேயே சீண்டிய சீமான்... ஒரேடியாய் ஒதுங்கிய காளியம்மாள் - கட்சித் தாவலுக்கு காரணம் இதுவா?