மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியைக் கொண்ட நீலகிரி மாவட்டம், உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடிய மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. மே மற்றும் ஜூன் இரண்டு மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏறத்தாழ உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள. அவர்களைக் கவரும் விதமாக மே மாதம் முழுவதும் உதகையில் மலர் கண்காட்சி போன்றவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான காய்கறி கண்காடி முதல் மலர் கண்காட்சி வரையிலான தேதிகளை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!
கோடை விழாவின் தொடக்கமாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. அத்துடன் மே 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11-வது வாசனை திரவிய காட்சி நடைபெறுகிறது. உதகையில் நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20-வது ராஜா கண்காட்சி நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மே 16 முதல் 21 வரை 6 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது. அதனையடுத்து மே 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடைபெறுகிறது. கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி மே 30, 31 மற்றும் ஜீன் 1-ந்தேதி வரை 3 நாய்கள் நடைபெறுகிறது.
முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகள் அதாவது, 127வது மலர் கண்காட்சிக்காக ஏறத்தாழ உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மலர்களை கொண்டு இந்த மலர் அலங்காரம் செய்வதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!