×
 

சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த‌ ஆசை!

மீண்டும் காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சந்தானத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குனநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - சந்தானம் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம் ' மதகஜராஜா'. இப்படம் வெளியாவதில் சிக்கலை சந்தித்தால், படம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளையும் கடந்து 13 ஆண்டுகள் கழித்து படம் வெளியாக உள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படம் வருகிறது. எதிர்பார்த்ததைவிட இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் படக்குழு உற்சாகமாகியுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் இயக்குநர் சுந்தர்.சி. பேசினார். அப்போது அவர் கூறுகையில், "13 ஆண்டுகளாக இந்த நாளுக்காகத் காத்திருந்தேன். இன்று அனைவரும் இப்படத்தை ரசித்து சிரித்து பார்க்கும்போது, இதைவிட சிறந்த பொங்கல் பரிசு எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்.  இப்படம் ஆரம்பிக்கும்போதே பொங்கல் வெளியீடு என்றுதான் அறிவித்தோம். படம் லேட்டாக வந்தாலும் பொங்கலுக்கு லேட்டஸ்டாகவே வந்திருக்கிறது. குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது  உங்களை மனம் விட்டு சிரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உண்மையில் சந்தானத்தை மிகவும் மிஸ் செய்கிறேன். ‘மதகஜராஜா’ படம் பார்த்தால், நான் ஏன் அப்படி கூறுகிறேன் என்று தெரியும். இப்போது அவர் பெரிய நாயகனாகிவிட்டார். அவருக்கு என்னுடைய  வேண்டுகோள். அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.  இதைக் கேட்டால் சந்தானம் கோபித்துக் கொள்வார். என்றாலும் மிஸ் யூ சந்தானம்” என்று சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'எமர்ஜென்சி' படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத்; பிரியங்காவை சந்தித்து, படம் பார்க்க, அழைப்பு விடுத்தார்

 

இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் காதலிக்க நேரமில்லை ட்ரெய்லர்.. யூ டியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல்.....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share