×
 

‘பசியோடு இருப்பவர் நூலகத்துக்கு செல்வாரா..?’ கிராமங்களில் நூலகம் கேட்டவருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

உயர்ந்த சுகாதார சூழல், தரமான கல்வி, நல்ல மருத்துவம் ஆகியவைதான் செழிப்பான கிராமங்களை உருவாக்கும் கிராமங்களுக்கு இதுதான் தேவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தோனா கிராம மேம்பாட்டு அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு நூலகம் அமைக்க உத்தரவிடுங்கள் என்று தெரிவித்திருந்தது. இந்த மனுவை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிடுகையில் “ கிராமங்களில் நூலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பாராட்டுக்குரியதுதான். ஆனால்,  கிராமங்களுக்கு அதிகமான தேவை என்பதையே அமைக்க வேண்டும்.

நீங்கள் இந்தியாவில் உள்ள கிராமங்களை முன்னேற்ற நீங்கள் விரும்பினால், உயர்ந்த சுத்தம், தரமான கல்வி, மருத்துவ வசதி ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு மனிதர் பசியோடும்,பட்டினியோடும் இருப்பவர் நூலகத்துக்கு செல்வாரா என்று கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: ‘முதலில் புரிந்து கொள்ளுங்கள்’.. காங்கிரஸ் எம்.பி மீதான FIR ரத்து.. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிடுகையில் “மாநிலங்களுக்கு நிதிச்சிக்கல் அதிகமாக இருக்கிறது, அதனால், சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதியை கிராமங்களில் மேம்படுத்த முடியாமல் இருக்கிறது. மாநில அரசுகளின் பட்ஜெட்டில் 10 முதல் 15 சதவீதம் கண்டிப்பாக கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்க வேண்டும், அதன்பின் உண்மையான  வளர்ச்சியைக் காணலாம்.

முன்னுரிமை ஒவ்வொருவருக்கும் மாறுபடும், நீங்கள் நூலகம் தேவை என்று முன்னுரிமை கேட்கிறீர்கள், மற்றவர்களோ கிராமங்களில் நல்ல தரமான மருத்துவ வசதி கேட்கிறார்கள். சிறுகுழந்தைகளின் வளர்ச்சிக்கு நூலகம் தேவை என்பதை ஏற்கிறோம். வரலாறு, கலாச்சாரம், அரசியலமைப்பு மதிப்புகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் போன்ற பாடங்களை வழங்கலாம்.

மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு நூலகம் அவசியம் அவர்களிடம் அரசியலமைப்புச் சட்டத்தின் மிதிப்புகளையும், ஜனநாயக மதிப்புகளையும் உணரலாம். ஆனால், அனைவருக்கும் சமமான சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி தரப்பட வேண்டும்.

கிராமங்களில் மருத்துவ வசதி எப்படி இருக்கிறது என்று மனுதாரர் ஏதேனும் ஆய்வு செய்துள்ளாரா, குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது என்று தெரியுமா. கிராமங்களில் பள்ளிகள் போதுமான அளவு இருக்கிறதா, ஆசிரியர்கள் இருக்கிறார்களா, மதிய உணவு குழந்தைகளுக்கு கிடைக்கிறதா, கிராமங்களுக்கு குடிநீர் வசதி இருக்கிறதா என்பது மனுதாரருக்குத் தெ ரியுமா, இந்த சர்வே யாரேனும் எடுத்துள்ளீர்களா.

கொள்கைகளை தீர்மானிக்கும் அரசுதான், கிராமங்களுக்கு எது தேவை, எதற்கு முன்னுரிமை கொடகு்கலாம், நூலகமா அல்லது அடிப்படை கட்டமைப்பா என்பது தெரியும். மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனத்தில் எடுத்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”

இவ்வாறு நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது’.. உச்ச நீதிமன்றம் கண்டிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share