×
 

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்.. வதந்திக்கு டாட் வைத்தது சிபிஐ..!

நடிகர்.சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல தற்கொலைதான் என விசாரணைக்குப் பிறகு சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர், 2020, ஜூன் 14 ஆம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில், தற்கொலை என கூறப்பட்டது. இருந்தாலும் உடலில் காயங்கள் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை காவல் துறையினர், அமலாகத்துறை, சிபிஐ மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: தினமும் காதல் கணவன் டார்ச்சர்... கொலையில் முடிந்த மனைவியின் தற்கொலை!!

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று சுஷாந்த் சிங் தந்தை குற்றம் சாட்டி இருந்தார். மேலும், ரியா சக்ரவர்த்தியும் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருந்தார்.

இவரது மரணம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு வழக்கு, கடந்த ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா, அவரது உறவினர்கள் மற்றும் பிறருக்கு எதிராகவும், மற்றொன்று செப்டம்பர் மாதம் ரியாவால் ராஜ்புத்தின் சகோதரி மற்றும் மருத்துவர் மீதும் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கரை ஆண்டுகளாக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் ரியா சக்கரவர்த்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுஷாந்த் சிங் மரணத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

 

இதையும் படிங்க: தனிமையில் இருக்க சென்ற கள்ளக்காதல் ஜோடி... ரிசார்ட்டில் நடந்த விபரீதம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share