ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!
தமிழகத்தில் திமுக அல்லாத புதிய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து விட்டுதான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்சட்டம் வக்பு சொத்துக்களை சில தனிநபர்கள் சொந்தம் கொண்டாடுவதை அனுமதிக்காது. இது இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி. இதனை புரிந்து கொண்டால் ஒவ்வொரு இஸ்லாமியரும் இந்த சட்டத்தை பாராட்டுவார்கள். இந்த சட்டம் வக்பு சொத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பதை தடுத்து இருக்கிறதோ, அதேபோல் இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்களுடைய சொத்துக்களை, நிலத்தை, கோயில் சொத்துக்களை வக்பு வாரியமும் சொந்தம் கொண்டாட முடியாது.
ராமேசுவரத்துக்கு பிரதமர் மோடி வந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்க செல்லவில்லை. மேலும், பாம்பன் பாலம், ரூ.8,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழகத்துக்கு பிரதமர் அர்ப்பணிக்கும் நிகழ்வில் முதல்வர் பங்கேற்காமலும் புறக்கணித்து, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்தது மிகப்பெரிய துரோகம். தன்னால் ஒரு விசயத்தை செய்ய முடியாது என்றால் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது முதல்வர் ஸ்டாலின் பழக்கம். தமிழக பாஜகவின் மகத்தான, வீரியமிக்க இளம் தலைவர் அண்ணாமலை. கட்சிக்கு தொடர்ந்து பயன்பட்டு வருவார். அண்ணாமலை தேசத்துக்கு கிடைத்த சொத்து. அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வர்தான் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் மசோதா கொண்டு வந்தார். இதே மசோதாவை தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கொண்டு வந்தார். அப்போது, பேராசிரியர் அன்பழகன், ஜெயலலிதா செய்தது முட்டாள்தனம் என்று கூறினார். அது முட்டாள்தனம் என்றால், தற்போது ஸ்டாலின் செய்வது என்ன? அதை திமுக தான் விளக்க வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு தேவை என்றால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முழு விளக்கம் கேட்கும். ஆளுநரை கட்டுப்படுத்தும் இந்த தீர்ப்பு, குடியரசு தலைவரையும் கட்டுப்படுத்துமா? என்று விளக்க கேட்கும். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து விட்டுதான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,” அவர் ராம சீனிவாசன் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.!
இதையும் படிங்க: இவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுபுள்ளி... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் வரவேற்பு!!