×
 

அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!

கட்சி தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட மாற்றுக் கட்சியினர் 3,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டவர்களை மறைமுகமாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தாக்கி பேசினார்.  விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, "திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. இன்று கட்சித் தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.


நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதலவர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றுகிறார்கள்.  அவர்கள் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. அவர்கள் பெயரைச் சொல்லிக்கூட இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை. இங்கே மாற்றுக்கட்சி என்றுதான் போட்டிருக்கிறோம். ஏனென்றால், அந்தக் கட்சியின் பெயரைக்கூட நான் உச்சரிக்க விரும்பவில்லை.



திராவிட மாடல் என்றாலே சிலருக்குக் கோபம் வருகிறது. திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. நீங்கள் (சீமான்) தரக்குறைவாக பேசப் பேசத்தான் உங்களை விட்டு விலகுகிறார்கள். அவரால் திமுக வளர்கிறது. திமுகவை விமர்சிப்பவர்கள், திராவிட மாடல் ஆட்சியை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து அதை செய்யட்டும். அப்போதுதான் நமது வெற்றி இன்னும் பிரகாசமாக இருக்கும்.
அது போல் ஆளுநர் ஆர்என் ரவியும் பேசி திமுகவை வளர்க்கிறார். என்றைக்காவது ஆளுநரை மாற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாமோ? அவரை மாற்ற வேண்டாம். அடுத்த முறையும் அவர் ஆளுநர் உரையை படிக்காமலேயே வெளியேற வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும். பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நான் கோரிக்கை வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம்” என்று நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: கோட்டை விட்ட தவெக... கொத்தி சென்ற திமுக... சாதித்த உளவுத்துறை..

இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share