×
 

தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!

தெலுங்கானா எம்.எல்.ஏ-வுக்கு வாட்ஸ் அப்பில் நிர்வாணமாக வீடியோ கால் செய்து அதை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலிசார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா நகிரேகல் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக  வெமுல வீரேஷம் உள்ளார். இவருக்கு வாட்ஸ் அப்பில் திடீரென தெரியாத ஒரு எண்ணில் இருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது. அதனை எம்.எல்.ஏ. விரேஷ் எடுத்தபோது ​​வாட்ஸ் காலில் எதிர்முனையில் பேசியவர் நிர்வாணமாக இருந்துள்ளார். உடனே எம்.எல்.ஏ வீரேஷம் காலை கட் செய்துள்ளார். ஆனால் அதற்குள் சைபர் மோசடி செய்பவர்கள் வீடியோ காலை ஸ்கிரீன் ரெக்கார்ட்  செய்து அவருக்கே திருப்பி அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் வீரேஷத்திற்கு போன் செய்துள்ளனர். வீடியோவைப் வைத்து அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் வீடியோவை  காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி உள்ளனர். 

வீரேஷம் பணம் தர மறுத்த நிலையில் ஒரு சில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. வீரேஷை தொடர்பு கொண்டு தங்களுக்கு வந்த வீடியோ பற்றி தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீரேஷம், உடனடியாக போலீசாரிடம்  குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து எம்எல்ஏ விரேஷ் கூறுகையில்,

இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

செல்போன் ரிங்டோன்களில் சைபர் குற்றங்கள் குறித்து நமது அரசுகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எனக்கு போன் மூலமாகவும் மெசேஜ் மூலமாகவும் வந்து பணம் கேட்டு மிரட்டினர். நான் இன்று போலீசில் புகார் அளித்ததற்கு காரணம் மக்கள் யாரும் ஏமாறா கூடாது என்பதற்காக தான். என்னை போன்ற பொதுமக்களுக்கு இது போல  சைபர் குற்றவாளிகள் போன் செய்தால்.. தெரிந்தோ.. தெரியாமலோ.. அதனை எடுத்து விட்டால் பயந்து மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம். அவர்கள் மிரட்டலுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். 

எனக்கு அது போன்ற போன் அழைப்புகள், மெசேஜ்கள் வந்த பிறகு உள்ளூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு அனுப்பி விவரங்களை சேகரிக்க கூறினேன். போலீசார் விவரங்களை சேகரித்ததில் அது மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த சைபர் குற்றவாளிகளின் என்பது போலீசார் கண்டறிந்தனர்.  உடனடியாக இதன் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். என்னை போன்று எத்தனை பேருக்கு இவர்கள் போன் செய்து மிரட்டி உள்ளனர்? இவர்கள் வலையில் எத்தனை பேர் சிக்கி உள்ளார்கள்? என்பது தெரியவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே இது போன்ற சூழ்நிலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் எப்படி இதனை கையாள்வது என்பதற்காகவே இன்று போலீசில் புகார் அளித்துள்ளேன். எனவே தொகுதியிலும், மாவட்டத்திலும், மாநிலத்திலும் யாருக்கு இருந்தாலும் இது போன்ற சந்தேகத்திற்கிடமான போன் அழைப்புகள் வந்தால் அதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி  தலைமையில் சைபர் கூற்றத்திற்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தாலும் எவ்வளவு பெரிய பின்னணி இருந்தாலும் அவர்களை கைது செய்து அழைத்து வருவோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எங்கள் அரசு மும்முறமாக உள்ளது. அரசு செய்துவரும் விழிப்புணர்வின் காரணமாகவே  தற்பொழுது நான் இந்த புகாரை அளித்துள்ளேன் என்று கூறினர்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share