டெஸ்லா கார்கள் மீது தொடர் தாக்குதல்..? பயங்கரவாத செயல் என எலான் மஸ்க் புகார்..!
இத்தாலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லா கார்கள் எரிந்து சேதமாகி இருக்கும் நிகழ்வு ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஜிம் நிறுவனத்தின் ஈவ்1 கார் தயாரிப்பை நிறுத்திய போது டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. எலான் மஸ்க் என்பவரால் இந்த மின்சார கார்கள் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்ட நிலையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. டெஸ்லா கார்கள் மாடல் S, மாடல் 3, மாடல் X மற்றும் மாடல் Y போன்ற பல மாடல்களைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லாக்கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீ விபத்து ஏற்பட்ட போது விற்பனையகத்தில் யாரும் இல்லாத காரணத்தால் பெருமாசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
தொடர்ந்து தீ மூடுவதும் அணைக்கப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எலான் மஸ்க் அமைச்சர் பதவிக்கு ‘முழுக்கு’..? என்ன காரணம்..?
இந்த தீ விபத்தில் 17 கார்கள் முற்றிலும் எரிந்த நிலையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.சமீபகாலமாக டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு ரோம் நகரில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 கார்கள் எரிந்து சேதமாகின.
அதுமட்டுமல்லாது அமெரிக்காவிலும் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் மீது தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெஸ்லா கார்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதை ஒரு பயங்கரவாத தாக்குதல், முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய விஷயம், இது போன்ற செயல்கள் முட்டாள்தனமானது என்று எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! ஏலத்தில் விடப்பட்ட ட்விட்டர் பறவை!