‘டெஸ்லா கார்’ வாங்கலியா! இந்தியாவில் விற்பனை ஏப்ரலில் தொடக்கம்! விலை தெரியுமா?
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தனது டெஸ்லா பேட்டரி காரை ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது என்று சிஎன்பிசி-டிவி18 சேனல் தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பையில் டெஸ்லா கார் விற்பனைக்கான விற்பனையகம் திறக்கப்படலாம் என்றும், ஏப்ரல் முதல் வாகனத்துக்கான முன்பதிவு தொடங்கப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதிப்பதற்காக ஆட்களை எடுப்பதற்கான விளம்பரத்தை லிங்க்டுஇன் பக்கத்தில் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. ஏறக்குறைய 15 வகையான பிரிவு பணிகளுக்கு ஆட்களை டெஸ்லா நிறுவனம் தேர்வு செய்ய இருப்பதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார் விற்பனைகம்(ஷோரூம்) மும்பையில் பிகேசி பிஸ்னஸ் மாவட்டத்திலும், புதுடெல்லியில் ஏரோசிட்டியிலும் பார்க்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா கார்களை, பெர்லின் தயாரிப்பு மையத்திலிருந்து இறக்குமதி செய்ய டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கி, அங்கு தயாரித்து விற்பனை செய்வது குறித்து டெஸ்லா நிறுவனம் இதுவரை ஏதும் கூறவில்லை.ஆனால் இந்தியாவில் ஷோரூம் அமைக்க டெஸ்லா நிறுவனம் கடந்த ஆண்டிலிருந்தே தகுதியான இடத்தைத் தேடிவந்தது.
இதையும் படிங்க: மோடி எஃபெக்ட்: இந்தியாவில் வேலைக்கு ஆட்களை எடுக்கத் தொடங்கியது டெஸ்லா நிறுவனம்
இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய நீண்டகாலமாகவே எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார் ஆனால், சுங்கவரி விதிப்பால் அதை ஒத்திவைத்தார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப்பின் இந்தியாவில் டெஸ்லா காருக்கான ஷோரூம் அமைக்கும் பணியும், வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. புதுடெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே ஏரோசிட்டியில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை திறக்கும் எனத் தெரிகிறது.
இந்த ஷோரூமில் விற்பனைநிலையம், சர்வீஸ் மையம், கார்ப்பரேட் அலுவலகம் அனைத்தையும் ஒருசேர வைக்கவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மும்பையில் விமானநிலையத்துக்கு அருகே பாந்த்ரா குர்லா காம்ப்ளஸ் பகுதியில் டெஸ்லா ஷோரூம் அமைக்கப்பட உள்ளது. டெல்லி, மும்பை ஆகிய இரு மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் 5ஆயிரம் சதுர அடிக்கு குறைவில்லாமல் டெஸ்லா ஷோரூம் அமைய இருக்கிறது. முதலில் புதுடெல்லியில் அமைய இருக்கும் டெஸ்லாவின் ஷோரூம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படலாம் என்று அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா பேட்டரி கார் இந்திய மதிப்பில் ரூ.21 லட்சம்(25ஆயிரம் டாலர்) விலை வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா