சம்மர் ஆட்டம் ஆரம்பம்... பி அலர்ட் மக்களே!!
தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களாக பனிக்காலம் நீடித்த நிலையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உணரப்படவில்லை. தற்கோபோது கோடைக்காலம் நெருங்குவதால் சூரிய கதிர்களின் தாக்கமும் தொடங்கியுள்ளது. அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் பகுதிகள் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 98 ஃபாரன்ஹீட்டும், ஈரோட்டில் 98 ஃபாரன்ஹீட்டும் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. அடுத்ததாக கோவை, வேலூர், சேலம் பகுதிகளில் 97 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!
மதுரை ஏர்போர்ட், திருப்பத்தூர் , திருச்சி பகுதிகளில் 86 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் சுட்டெரித்துள்ளது. சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளதால் சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்படுகிறது.
கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே தர்பூணி, கிர்னி பழங்களின் விற்பனையும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதேநேரம் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அருவிகளில் வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழை அழிப்பதே பாஜகவின் நோக்கம்... தோலுரித்த முதல்வர்...!