×
 

திருச்செந்தூர் கோயிலில் பட்டியலின மக்கள் தடுப்பு..? வீடியோ வெளியிட்டவர் வீட்டில் போலீசார் விசாரணை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாரி ஒருவர் பட்டியலின மக்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க மறுக்கிறார் எனவும், பெருந்திட்ட வளாக பணியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை, தரமாக கட்டப்படவில்லை என புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருச்செந்தூர் கோவிலில் 300 கொடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் கோவில் கோபுரம், வள்ளி குகை, கோவில் வளாகப்பணிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தது.கடந்த 2 தினனக்குக்கு முன்பு பாஜக மத்திய அரசு நலப்பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜன் ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக கட்டப்பட்ட வெஸ்டர்ன் கழிவறையில் மேலே வைக்கும் டேங்க் இல்லை. கழிவறையில் பல பொருட்கள் காணாமல் போனதாகவும், தரமாக கட்டவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் உள்ள பிரித்திவிராஜ் இல்லத்துக்கு இன்று அதிகாலை போலீசார் சென்றனர்.ஆனால் அவர் வீட்டில் இல்லை. 

இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர்.. ஹோலி பண்டிகையில் இப்படியா? கண்ட இடத்தில் கலர் பூசி அட்டூழியம்..!

அவரது வீட்டில் இருந்த மனைவி, எதற்காக வந்துள்ளீர்கள் என போலீசாரை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பிருத்திவிராஜை விசாரிப்பதற்காக அழைத்து செல்ல வந்துள்ளோம் என்று கூறினர். வாரண்ட் உள்ளதா? எந்த வழக்கில் அவரிடம் விசாரணை செய்யப்பட வேண்டும்? எனக் அவரது வீட்டில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு 2023 ஆம் ஆண்டு அவர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் வாரண்டை காட்டுங்கள் என்று அவரது வீட்டில் இருந்தவர்களால் கேட்டுள்ளனர். ஆனால் அதுகுறித்து போலீசார் எதுவும் கூறவில்லை.

அதிகாலை 4 மணிக்கு வந்து பிரித்திவிராஜை விசாரணைக்கு அழைத்து செல்ல என்ன அவசியம் உள்ளது என்று போலீசாரிடம் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போலீசார் எந்த பதிலும் அளிக்காமல் வாசலிலேயே காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு காத்திருந்த போலீசார் அதன்பின் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

பிரித்திவிராஜ் உங்களில் ஒருவன் என்னும் அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் உங்களில் ஒருவன் அமைப்பு சார்பில் திருச்செந்தூர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்த போஸ்டரில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் சுவிதா, பட்டியலின மக்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க மறுத்து வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜீவா நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் இந்த போஸ்டர் மக்களிடையே வேதனை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடைபெறவே இல்லை எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் கோயில் காவல் நிலைய போலீசார் 353 (2) என்ற பிரிவின் கீழ் போஸ்டர் ஒட்டிய உங்களின் ஒருவன் அமைப்பு நிர்வாகி பிரித்திவிராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பணிகள் குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை அதிகாலை 4 மணிக்கு போலீசார் தேடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share