சுற்றுலா வந்த 2 வெளிநாட்டு பெண்கள் சீரழிப்பு.. ஆண் நண்பர்களை வாய்க்காலில் தள்ளி விட்டு இருவர் வெறிச்செயல்..!
கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 2 வெளிநாட்டு பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேலியப் பெண், அவரது அமெரிக்க தோழி இருவரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் வந்த ஆண் நண்பர்களை அருகில் இருந்த வாய்க்காலில் தள்ளிவிட்டு இரண்டு பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடமிருந்து நகை மற்றும் பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.
வெளிநாட்டு பெண்கள் இருவர் மற்றும் அவர்களுடன் வந்த ஆண் நண்பர்களான அமெரிக்கர் ஒருவர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் உள்ளூர்க்காரர் ஒருவர் என 5 பேர் ஒன்றாக சேர்ந்து கர்நாடகத்தில் சனாப்பூர் ஏரிக்கரையில் இரவு விருந்து மேற்கொண்டனர். விருந்தின்போது, அவர்களுடன் உதவிக்காக பணிப்பெண் ஒருவரும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.4 லட்சம் கோடி கர்நாடகா பட்ஜெட் 2025.. புதிய வரிகள் இல்லை... முக்கிய அம்சங்கள் விவரம்..!
இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருவர் பெட்ரோல் நிலையத்துக்கு வழி கேட்பதுபோல, அவர்கள் 5 பேரிடமும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, மதுபோதையில் இருந்த அவர்கள் இருவரும் வெளிநாட்டுப் ஆண் நண்பர்கள் மூவரையும் அருகிலிருந்த கால்வாயில் தள்ளிவிட்டு, 2 வெளிநாட்டு பெண்கள் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவரையும் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டு தப்பியோடி விட்டனர். இந்நிலையில் கால்வாயில் தள்ளி விடப்பட்ட 3 பேரில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசினார்கள் என்றும், கால்வாயில் விழுந்தவர்களில் ஒருவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்ட பிரிவுகளில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைத் தேடும் பணியில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கங்காவதி கிராமப்புற காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இஸ்ரேல் பெண்ணின் ஆண் நண்பர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் (வயது 23), மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தபங்கஜ் (43) மற்றொருவர் பக்கத்து ஊரான கங்காவதி கிராமத்தை சேர்ந்த பாஸ். உள்ளூரை சேர்ந்த இவரைத்தான் காணவில்லை. போலீசார் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவர் தப்பி ஓடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக கோவிலில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அவர்கள் இரவு விருந்து தயாரித்துக் கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்ரிக்க பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் மணமகன்.. கோலாகலமாக நடந்த 60ம் கல்யாணம்..!