ஹெலிகாப்டர்ல வந்தாலும் பதவி கிடையாது! நான் தளபதி ரசிகன்... மார்த்தட்டும் புஸ்ஸி ஆனந்த்
உழைத்தவர்களுக்கு தான் பதவி என்றும் ஹெலிகாப்டரில் வந்தால் கூட பதவி கிடைக்காது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். அமைச்சர்கள் பலர் இருக்கும்போதே, சட்டமன்ற உறுப்பினர் பதவி போகும் வரும் ஆனால் தளபதியின் ரசிகர் என்பது எனக்கு கடைசி காலம் வரை இருக்கும் என கூறினேன். அந்த ரசிகர் என்பதுதான் தலைவர் விஜய் என்னை கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கி உள்ளார் என தெரிவித்தார்.
அதற்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விஜய்யிடம் நாம் கற்றுக் கொள்ளலாம் என்றும் பணக்காரர்களைக் கூட பார்க்காமல் இருந்தாலும் ஒரு கூலி தொழிலாளியை ஒரு மணி நேரம் கூட அமர வைத்து பேசக்கூடிய உன்னதமான தலைவர் தளபதி விஜய் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்யின் இஃப்தார் அரசியல் சொல்லும் சேதி... உளவுத்துறை ரிப்போர்ட் ... திமுக ஆதரவு வாக்குகளை அள்ளுகிறாரா?
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் இருக்கிறார்கள் எனக் கூறினால் அது தமிழக வெற்றி கழகத்தில் தான் என்றும் தமிழ்நாடு முழுவதும் விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தின் பெயரில் தினமும் 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
யார் போஸ்டர் ஒட்டினார்களோ, யார் கொடி கட்டினார்களோ, யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி என்றும் மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் சரி ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி, பதவி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.இதுதான் தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் உத்தரவு எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தவெக கொடி கம்பம் வைப்பதில் சிக்கலா..? நீதிமன்றம் கூறியது என்ன..?