பதவிக்கு வசூல் வேட்டையா? - சூனா பானா ஸ்டைலில் பஞ்சாயத்தை கலைத்துவிட்ட பார்க்கும் புஸ்ஸி ஆனந்த்... தகிக்கும் தவெக தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழக விவகாரத்தில் விஜய் சொல்லும் பேச்சை புஸ்ஸி ஆனந்த் கேட்பது இல்லை என அக்கட்சியின் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலான நிலையில், தற்போது பதவிக்காக வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தில் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பதவிக்கு பணம் வாங்குவதாக புதிய புகார் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக விவகாரத்தில் விஜய் சொல்லும் பேச்சை புஸ்ஸி ஆனந்த் கேட்பது இல்லை என அக்கட்சியின் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலான நிலையில், தற்போது பதவிக்காக வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆதங்கத்தைக் கொட்டிய வாட்ஸ் அப் மெசெஜ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சனை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத் தலைவராக உள்ள குஷி மோகன் என்பவர் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்பதாக அம்மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் தொண்டர் ஒருவர் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் கையில் கிடைத்த முக்கிய கடிதம்...’அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க’ உடனடியாக பறந்த சிக்னல்...
தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 19 அணிகள் உள்ளன. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து வசூல் வேட்டை நடப்பதாகவும், இதனை தலைமையேற்று நடத்துவதே புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் புகார்கள் கிளம்பியுள்ளன. விழுப்புரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் பதவிக்கு பணம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பதவிக்கு யாராவது பணம் வாங்கினார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாக்களில் இந்த வாட்ஸ்அப் சாட் வைரலான நிலையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில் “பதவிக்காக பணம் கொடுப்பதோ, வாங்குவதொ தலைமைக்கு தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி உடனடியாக அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களே திட்டமிட்டு பரப்பி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவிற்கு எதிர்மாறாக வாட்ஸ்அப் சாட்டில் மற்றொரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் தமிழக வெற்றிக் கழக அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் புஸ்ஸி ஆனந்திற்கு புகார் தெரிவிக்கலாம் என அவரது பர்சனல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மெசெஜில் கிளைக்கழகம், வார்டு, நகரம், பேரூராட்சி, மாவட்டம் ஆகிய பதவிகளைத் தவிர்த்து, அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் மட்டும் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அப்படியென்றால் அணிகள் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு பணம் வசூலிப்பது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தெரிந்து தான் நடக்கிறதா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல், அடிமட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வரை பதவிக்கு பணம் வாங்குவது தொண்டர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. தவெகவில் புஸ்ஸி ஆனந்திற்கு தெரியாமல் துரும்பு கூட அசையாது என்ற நிலையில், இந்த வசூல் வேட்டை மட்டும் அவருக்கு தெரிந்திருக்காதா? இல்லை தெரிந்து கொண்டே அனுமதிக்கிறாரா? அல்லது இந்த வசூல் வேட்டையே அவர் தலைமையில் தான் நடக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வரும் இந்த வசூல் வேட்டை தொடர்பான குறுஞ்செய்திகள் தவெக தலைவர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா? அவர் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பேசுறான் சின்ன பையன்... நீ யார்ரா..?? விஜயை ஏளனமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!