விஜயின் புது ரூட்… புதுச்சேரிக்கு தாவும் தவெக… ரங்கசாமியுடன் கூட்டணிப்பேச்சு வார்த்தை..!
ரங்கசாமியை தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சிகள் தற்போதே வியூகங்கள் வகுக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நாதக தனித்தே போட்டியிடும் என சீமான் அறிவித்துவிட்டார்.
பாஜக மற்றும் திமுகவை ஒரே சேர விமர்சனம் செய்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களமிறங்கும் என்பதை நடிகர் விஜய் உணர்த்திவிட்டார். தவெகவுக்கு இது முதல் தேர்தல் என்பதால், அதற்காக வியூகங்களை ஜான் ஆரோக்கியராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
தனித்துப் போட்டியிட விஜய்க்கு, ஜான் ஆரோக்கியசாமி தரப்பு ஆலோசனை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட விஜய் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு தனியாக தவெக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தேர்தலில் நிற்பதற்கு பசையான ஆட்களை கண்டுபிடிங்கள்.
இதையும் படிங்க: சைலண்டாக வந்து சம்பவம் செய்த விஜய்.. தவிடு பொடியான “வொர்க் ப்ரம் ஹோம்” அரசியல்...!
234 தொகுதிகளுக்கும் கட்சிக்கு செலவு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று சொல்லி இருக்கிறாராம் விஜய். இந்த நிலையில் புதுச்சேரியிலாவது கூட்டணியாக களமிறங்களாம் என விஜய் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே புதுச்சேரி காங்கிரஸ் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நல்ல நட்புறவில் இருந்து வருகிறார் விஜய்.
இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துளமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரங்கசாமியை தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!