×
 

தும்பிக்கை துண்டாகி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை.. 2 வனகாவலர்கள் சஸ்பெண்ட்!

தருமபுரி அருகே யானை வேட்டையாடப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறிய வனத்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வடசரகத்திற்கு உட்பட்ட ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். 

குறிப்பாக கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில், வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர்  தட்டுப்பாட்டை தடுப்பதற்கு ஆங்காங்கே குளம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தன. அதுமட்டுமின்றி அவ்வப்போது வனத்துறையினர் வனவிலங்குகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அன்று யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. ரோந்து பணிக்காக சென்ற வனத்துறையினர் உயிரிழந்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வரட்டா.. சமையல் கூடத்திற்குள் இருந்த தண்ணீர் கேனை லாவகமாக சுருட்டி சென்ற காட்டு யானை.. வீடியோ வைரல்..!

சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவுடன் உரைத்த வனத்துறை அதிகாரிகள் யானை உயிரிழந்ததற்கான காரணம் இதற்கு பின்னால் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதற்கு விசாரணையை தொடங்கினர். அதன்படி யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவ குழு, யானையின் முகம் சிதைக்கப்பட்டு தும்பிக்கை தனியாக கிடந்ததை உறுதி செய்தனர்.

அடையாளம் தெரியாதவாறு யானையை தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததனால், தந்தத்திற்காக யாரேனும் யானையை கொன்று இருக்கலாம் என வனத்துறையினர் யூகம் வகித்தனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர் தனிநபராக இருக்க முடியாது என்றும் குழுவாக செயல்பட்டு இருக்கலாம் என கணித்த வனத்துறையினர் அந்த குழுவிற்கு தொலைபேசி வருகின்றனர்.

முன்னதாக இந்த சம்பவத்தை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல் ஏமனூர் பீட் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டுள்ளார். மேலும் யானை உயிரிழப்பதற்கான காரணம் குறித்து தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share