உ.பி. கூட மாறிவிட்டது தமிழகம் நிலை? தலைகவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என அறிவிப்பு..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்களில் தலைகவசம் இன்றி இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது என்ற புதிய விதிமுறையை உ.பி. போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது.
இந்த விதிகளை பெட்ரோல் நிலையங்கள் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மாநில போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நரைன் சிங் இது தொடர்பாக கடந்த 8ம் தேதி அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “ இரு சக்கரவாகனங்களில் வருவோர் தலைக்கவசம் அணியாவிட்டால் அவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் இந்த கடிதம் அனுபப்பட்டு, இதை கடுமையாக அமல்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உத்தப்பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் விபத்தில் சிக்குவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகஇ ருக்கிறது, இதைக் குறைக்கும் நோக்கில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாலைப் பாதுகாப்புவிதிகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி முதல்வர் ஆத்தியநாத் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 26ஆயிரம் பேர்வரை தலைக்கவசம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.
இந்தத் திட்டம் முதலில் 2019ம் ஆண்டு கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, அது சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்ததால் படிப்படியாக பல மாவட்டங்களில் கொண்டுவரப்பட்டு இப்போது மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
இதையும் படிங்க: நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் ...நடுங்கிப்போனா நெல்லை வாசிகள்
“ 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, உபி மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றை உணர்ந்து பெட்ரோல் நிலையங்கள் போலீஸாருக்கும், போக்குவரத்து துறைக்கும் ஒத்துழைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு தலைகவசம் இல்லாவிட்டால் அவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது. அப்போதுதான் இந்தக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்த முடியும். தலைக்கவசம் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையையும் வைத்து விழிப்புணர்வூட்ட வேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூவலைத்தளம், நாளேடுகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றிலும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகளை அமல்படுத்துவதோடு நில்லாமல், அவ்வப்போது இந்தவிதிகளை முறையாக மக்கள் கடைபிடிக்கிறார்களா என சோதனை செய்வதும் அவசியம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில்கூட தலைக்கவசம் அணியாவிட்டால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை என்ற விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக்தில் தலைக்கவசம் அணிதல் என்பது வெறும் உத்தரவோடு இருக்கிறது, இதை வாகன ஓட்டிகளும் முறையாக பின்பற்றுவதில்லை, அதிகாரிகளும் பெயரளவுக்கு அபராதத்தோடு விட்டுவிடுகிறார்கள்.
இதையும் படிங்க: கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்'