×
 

பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!

வாணியம்பாடியில் காலை 7 மணி அளவில் பள்ளி காவலாளி ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை. கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகம் கவனம் பெற துவங்கி உள்ளன. இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு போதைப் பொருள் புழக்கம அதிகரிப்பே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

ஆனால் இதுகுறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிப்பால் குற்றசம்பவங்கள் அதிக வெளிச்சம் பெறுவதாகவும், கடந்த அதிமுக ஆட்சியை விட குற்ற சம்பவங்கள் குறைவாக நடப்பதாக விளக்கம் அளித்தார். இதை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்தன. கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என குற்றம் சாட்டினர். மக்கள் போதிய பாதுகாப்பு இன்றி வெளியில் நடமாட தயங்குவதாகும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி, அடையாளம் தெரியாத கும்பலால் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு ஆஜிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி என்ற 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இர்பான் காவலாளியாக வேலை செய்து வந்தார். 

இதையும் படிங்க: என்னை விட்டுட்டு சரக்கு அடிப்பியா? பொசசிவ் நண்பன் வெறிச்செயல்.. உயிர் நண்பனுக்கு கத்திக்குத்து..!

இந்த நிலையில் இன்று காலை இர்பான், வழக்கம்போல் தனது சைக்கிளில் பள்ளிக்கு பணிக்கு சென்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மகும்பல் ஒன்று அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மர்ம கும்பல் இர்பானை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு தாக்க துவங்கி உள்ளனர்.

மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இர்பான் வயிற்றில் குத்தி உள்ளனர். வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டபடி எழுந்து ஓடினார் இர்பான். அப்போதும் அந்த மர்ம கும்பல் அவரை விடாது துரத்தி சென்று, ஓட, ஓட விரட்டி சென்று இடுப்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இர்பான், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் மர்ம கும்பல், இர்பான் இடுப்பில் குத்திய கத்தியை விட்டு, விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இர்பான் வேலை செய்யும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பரீட்சைக்கு நேரமாச்சு.. பேருந்துக்காக காத்திருந்த +2 மாணவி.. நிறுத்தாமல் போன டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share