திருமாவே இன்னம் தெளியல... அதுக்குள்ள எடப்பாடிக்கு இப்படியொரு ஷாக்கா? - விஜய் கொடுக்கப் போகும் ட்விஸ்ட்!
அதிமுகவில் இருந்து விலகிய பிடிஆர் நிர்மல் குமார் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அதிமுக முக்கிய நிர்வாகியையும் விஜய் தட்டித்தூக்கியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதவ் அர்ஜூனாவிற்கு முக்கிய பதவி:
திமுகவை கடுமையாக விமர்சித்ததற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதவ் அர்ஜுனா விசிகவை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் புஸ்ஸி ஆனந்த் அதனை தடுத்து வருவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்
இந்நிலையில் தவெகவில் பதவிக்கு பணம் வாங்குவதாக எழுந்த புகார்களால், கட்சிக்கு ஏற்பட்ட டெமேஜைக் கன்ட்ரோல் செய்ய விஜய் உடனடி ஆக்ஷனில் இறங்கினார். ரசிகர் மன்ற காலத்தில் இருந்த உண்மையாக உழைத்த நிர்வாகிகளைத் தேடிப்பிடித்து மாவட்ட செயலாளர்களாக பதவி கொடுத்து வருகிறார். அத்தோடு இல்லாமல் சில முக்கியமான பிரமுகர்களை கட்சியில் இணைக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆதவ் அர்ஜுனா நேற்று சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விஜயை சந்தித்து நேரில் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படப்போவதாகவும், ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா கொடுத்துவிட்டு கட்சியின் ஆலோசகராக செயல்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
திருமா சொன்ன ரியாக்ஷன்:
ஆதவ் அர்ஜுன், விஜய் அவர்களுடைய கட்சியில் சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , அவருக்கு தனது வாழ்த்துக்களையும் விசிக தலைவர் திருமா தெரிவித்திருந்தார். அவர் மீது விசிகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சி இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவர் விலகினார் என்பதுதான் நிஜம். ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் இயல்பாக இருப்பதுண்டு. அதேபோல அவருக்கு சில வழிகளை தந்தும் அதை அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம். நடிகர் விஜய் அவர்களை அர்ஜுன் சந்தித்தார் என்பது உண்மை எனக்கூறியிருந்தார்.
அதிமுகவிற்கு அதிர்ச்சி:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார், 2024ம் ஆண்டு அக்கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து பிடிஆர் நிர்மல் குமார் விலகியதாக கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் சோசியல் மீடியாவில் இருந்த அதிமுக தொடர்பான முகப்பு படத்தையும் அவர் நீக்கியுள்ளார்.
இதனிடையே, இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு கையில் மலர் கொத்துடன் நிர்மல் குமார் வருகை புரிந்தார். அங்கு மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தும் தனி அறைக்கு புஸ்ஸி ஆனந்த் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அந்த அறையில் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் கட்சியில் இணைவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இன்றே கட்சியில் இணையும் ஆதவ் அர்ஜூனா?
ஒருபுறம் நிர்மல் குமாருடன் தீவிர ஆலோசனையில் விஜய் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜூனாவும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். இன்றே பிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகள் பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!