×
 

தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?

தேவைப்பட்டால் தேமுதிகவையும் உள்ளே இழுக்க திமுக தயங்காது என்று கள நிலவரங்கள் கூறுகின்றன.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் இருந்த போதும், மேலும் சில கட்சிகள் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. பாமக தரப்பில் சில தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு மாற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் மேலும் நீடித்தால் கட்சியின் நிலைமை கந்தலாகி விடும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது. திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு மாறினால் சில சீட்களில் வெல்ல முடியும். இப்போது இருக்கிற சீட்களையாவது தக்க வைக்க முடியும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.

மறுபக்கம் தேமுதிக கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத நிலையே நீண்ட காலமாக நிலவுகிறது. ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கேப்டன் இருந்த காலத்தில் நமது நிலைமை எப்படி இருந்தது. இப்போது இப்படியாகி விட்டதே என்ற விரக்தியில் அந்தக் கட்சி உள்ளதாம். வட மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தேமுதிகவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. இன்னும் முழுமையாக அது கரைந்து போய் விடவில்லை. எனவே வலுவான கூட்டணிக்கு மாறும் யோசனையில் தேமுதிக உள்ளது.

இதையும் படிங்க: தம்பி விஜய், ரொம்பவே குழப்பிக் கொள்கிறார்… சீமான் சொன்ன அந்த ரகசியம்..!

அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டும் கூட எடப்பாடி பழனிசாமி மறுத்தது தேமுதிகவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தேமுதிகவின் பாசம் தற்போது திமுக பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுக்குமே தேமுதிக மீது ஒரு நோக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அரசு மீது நிலவும் பல்வேறு  அதிருப்திகள், விஜயயின் அரசியல் வருகை, வலுவடைந்து வரும் சீமான், பாஜகவின் தீவிரம் என பல முக்கிய அம்சங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருக்கிற வாக்கு வங்கி மட்டும் இன்றி கிடைக்கும் வாக்குகளையும் வளைத்துப் போடும் முடிவில் இருக்கிரது திமுக.

 

ஆகையால்,  தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தால் அது திமுக தனக்கான ஆதாயமாகவே பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்தால் அவர்கள் கேட்கும் சீட்டுகளை ஒதுக்க முடியுமா? என திமுகவுக்கு ஒரு நெருடலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூட்டணியில் அதிக அளவிலான கட்சிகள் இருப்பதால், அவர்களுக்கும் சீட் தர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இருந்தாலும் தேவைப்பட்டால் தேமுதிகவையும் உள்ளே இழுக்க திமுக தயங்காது என்று கள நிலவரங்கள் கூறுகின்றன.

தேமுதிக மீது திடீரென திமுகவுக்கு அபிப்பிராயம் வர காரணமே விஜய்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை தேமுதிக - அதிமுக - விஜய் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து விட்டால் நமது நிலைமை சிக்கலாகி விடும் என்று திமுக தரப்பு யோசிக்கிறதாம். எனவே தான் தேமுதிகவை துண்டாக தூக்கி வரும் திட்டத்தில் திமுக இருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

இதையும் படிங்க: நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய்.. அண்ணாமலையின் விமர்சனத்துக்கு சீமான் கொடுத்த ரியாக்சன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share