×
 

விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

விஷ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து மக்களின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில,மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் தென் சென்னையில் நாளை நடைப்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின் சென்னை நங்கநல்லூரில் உள்ள எம்ஜிஆர் ரோடு ஜே.கே மஹால் அருகில் இந்து சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி நாளை மாலை 5.30 மணி முதல் 10மணி வரை பொதுக்கூட்டமும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கு  அனுமதி கோரி கடந்த மார்ச் 10 ம் தேதி காவல்துறைக்கு மனு அளித்தும் இதுவரை காவல்துறை எந்த அனுமதியும் வழங்கவில்லை என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வழக்கறிஞர் பாலா மனிமாறன் ஆஜரானார்.

அப்போது காவல்துறை தரப்பில், விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பறிபோன இளைஞரின் பார்வை.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share