தமிழகத்தை, தமிழ்மொழியை கௌரவமாகக் கருதுகிறோம்... அடித்துச் சொல்லும் அமித் ஷா..!
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம்; தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்
“அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயல்பானது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது!” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026ல் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய அமித் ஷா, ''அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம்.தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலும் தேசிய அளவில் மோடி அளவிலும் கூட்டணி இருக்கும்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா..? அறிவித்தார் அமித் ஷா... பாஜக அசத்தல் ப்ளான்..!
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க இணைந்து போட்டி.. தமிழ்நாட்டில் அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்.அதிமுக உள் விவகாரங்களில் நான் தலையிடப்போவதில்லை. அதிமுக நிபந்தனை வைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம். தொகுதி பங்கீடு குறித்து அடுத்தடுத்த சந்திப்புகளில் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். தமிழ்நாட்டை எப்போது சிறப்பான இடத்தில் வைத்துள்ளோம்.
சிலம்பத்தை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இணைத்தவர் பிரதமர் மோடி. காசி தமிழ் சங்கமம், சௌராஸ்டிரா தமிழ் சங்கமத்தை நடத்தியவர் பிரதமர். தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம்; தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்'' என அவர் தெரிவித்தார்.
ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் . டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப திமுக மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
இதையும் படிங்க: இனி அவரை சந்திக்கவே மாட்டேன்... அமித்ஷாவை தவிர்த்த இ.பி.எஸ்... பகீர் பின்னணி..!