கள்ளக்காதலால் விபரீதம்.. காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி.. வீடியோ காலில் கொலையை ரசித்த குரூரம்..!
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்த மனைவி, கொலையை வீடியோ காலில் ரசித்து பார்த்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவனகவுடா பட்டீல் (வயது 43). இவரது மனைவி ஷைலா (வயது 38). இந்த நிலையில் ஷைலாவுக்கு பலோகி பகுதியை சேர்ந்த ருத்ரப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. இருவரும் 2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, சிவனகவுடாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவி ஷைலா, ருத்ரப்பா ஆகியோரை கண்டித்துள்ளார்.
ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த ஏபரல் 2-ந்தேதி ஷைலாவை அவரது சொந்த ஊரான காடிகொப்பா கிராமத்திற்கு சிவனகவுடா பட்டீல் அழைத்து சென்றுள்ளார். மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர் ஒருவர், சிவனகவுடா கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் ஷைலாவும் சம்பவ இடத்துக்கு வந்து சிவனகவுடாவின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை கொன்றதாக கணவன் கைது.. 2 ஆண்டுகள் சிறையில் தவிப்பு.. மனைவி மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..!
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஷைலாவின் நடவடிக்கையிலிம் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை நடந்த சமயத்திலும், அதற்கு பிறகும் ருத்ரப்பாவுடன் ஷைலா பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டாக அவர் ருத்ரப்பாவுடன் செல்போனில் பேசி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஷைலாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதன்படி சிவனகவுடாவை உயிருடன் இருந்தால், நாம் சேர்ந்து வாழ முடியாது. எனவே சிவனகவுடாவை கொலை செய்ய வேண்டும் என ஷைலா முடிவுசெய்துள்ளார். அதன்படியே சிவனகவுடாவை கொலை செய்யும் படி ருத்ரப்பாவிடம் ஷைலா கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து கொலை திட்டத்தை தீட்டியுள்ளனர். அந்த திட்டத்தின்படி ஷைலா தனது கணவரை மோட்டார் சைக்கிளில் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து சிவனகவுடா பட்டீல் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பும் வழியில் ருத்ரப்பா அவரை வழிமறித்து மது விருந்து கொடுத்துள்ளார்.
இதில் சிவனகவுடாபோதை தலைக்கு ஏறியதும் ருத்ரப்பா அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சிவனகவுடா பட்டீல் இறந்து போனது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது. கொலை செய்ததும் ருத்ரப்பா அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது. ருத்ரப்பா, சிவனகவுடாவை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை, செல்போனில் வீடியோ காலில் ஷைலா பார்த்து ரசித்து மகிழ்ந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ருத்ரப்பா, ஷைலா இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..!