×
 

‘என்னை நெருங்கி வந்தார்...’ பாஜக பெண் எம்.பி பரபரப்பு புகார்... எஸ்.சி-எஸ்டி சட்டத்தில் சிக்கும் ராகுல்காந்தி..?

‘என்னை நெருங்கி வந்தார்...’ பாஜக பெண் எம்.பி பரபரப்பு புகார்... எஸ்.சி-எஸ்டி சட்டத்தில் சிக்கும் ராகுல்காந்தி..?

அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை பிடித்து தொங்கிக் கொண்டு காட்டுக்கூச்சலிட்டு வருகின்றன எதிர்கட்சிகள். நாடாளுமன்றத்தில் வெடித்த போராட்டம் தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. நகரெங்கும் போராட்டம், வீதியெங்கும் ஆர்பாட்டம் என எதிர்கட்சிகளின் முழக்கம் ஓய்ந்தபாடில்லை. இதனை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியபோது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே முட்டல் மோதல் ஏற்பட்டு விவகாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வரை சென்று விட்டது.

இந்த விவகாரத்தில் சூத்திரவாதியான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அணி திரண்டு புகார் அளித்துள்ளனர்.  ராகுல் காந்தி மீது பாஜகவின் நாகாலாந்து பெண் எம்.பி., முன் வைத்துள்ள குற்றச்சாட்டு பகீர் ரகம். பெண் எம்.பி.யான ஃபனாங் கொன்யாக், ராகுல் காந்தி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பை கிளப்பியுள்ளார். கொன்யாக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

பாஜக பெண் எம்பி ஃபனாங் கொன்யாக் கூறுகையில், ‘‘அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸுக்கு எதிராக நான் போராட்டம் நடத்தியபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம் மிக நெருக்கமாக வந்தார். என்னை நோக்கி சத்தமாக கத்த ஆரம்பித்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை’’ என இரட்டை அர்த்தம் பொதிந்த புகாரை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு வால் நீட்டி சீனாவுக்கு தலை காட்டும் இலங்கை... அனுர திசாநாயக்க-வின் இரட்டை ஆட்டம்..!

ஆனால், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய விடாமல் தன்னை தடுத்து நிறுத்தப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மறுபுறம், பல எம்பிக்களை ராகுல் காந்தி தாக்கியதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பாஜக எம்பிக்களால் ராகுல் காந்தி சூழப்பட்டதாகத் தெரிகிறது.

பாஜக எம்பிக்கள் முகேஷ் ராஜ்புத், பிரதாப் சாரங்கி ஆகியோர் தங்களை ராகுல் காந்தி தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இநீலையில், எஸ்சி-எஸ்டி பிரிவைச் சேர்ந்த நாகாலாந்தின் பெண் எம்பியும் ராகுல் காந்தி தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி புயலைக் கிளப்பியுள்ளார்.

இப்போது ராகுல் காந்தி மீது எஸ்டி-எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரவிசங்கர் குமார் கூறும்போது, ​​'இந்த விவகாரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த விவகாரம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடந்திருப்பதால், போலீசார் முதலில் சிசிடிவி காட்சிகளைப் பெறுவார்கள். சிசிடிவி காட்சிகளில் ராகுல் காந்தியின் செயல்பாடு தெரிந்தால், மக்களவை சபாநாயகரின் ஒப்புதலுக்குப் பிறகு, டெல்லி போலீஸார் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யலாம். எஸ்டி பெண் எம்பியைப் பொறுத்த வரையில், அவர் புகார் கொடுத்தால், போலீஸ் கண்டிப்பாக எஸ்சி -எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்துள்ளது காங்கிரஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காலை, ராஜ்யசபாவில் அவைத் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜுவும், நாடாளுமன்ற நுழைவு வாயிலில், பா.ஜ., பெண் எம்.பி.,க்களுக்கு எதிராக, ராகுல் காந்தி பலாத்காரத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர். 

ராகுல் காந்தி மீது சம்பந்தப்பட்ட பெண் எம்பி ராஜ்யசபா தலைவரிடமும் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து..! திக்..திக்..திக்.. திட்டமிட்ட கொலையா..! ராணுவம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share