×
 

ஓடும் காரில் பலாத்கார முயற்சி இளம்பெண் பலி, தங்கை படுகாயம்.. 30 நிமிட மரண போராட்டம்..!

லக்னோவில் ஓடும் காரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய 3 பேர் கொண்ட கும்பல் முயன்றதில் இளம்பெண் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பந்த்ரா அருகே உள்ள ராம்தாஸ்பூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமண வீட்டார், பந்த்ராவைச் சேர்ந்த மருதாணி கலைஞர்களான சகோதரிகள் இருவரை மருதாணி நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த நிலையில் 21 வயதான அக்கா மல்லிகா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

19 வயதான தங்கை அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு மருதாணி கலைஞர்களாக சென்றுள்ளனர். அங்கு திருமண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு, மணப்பெண் அலங்காரத்திலும் உதவி செய்துள்ளனர். இதில் நள்ளிரவு ஆகிவிட்டதால் தனிமையில் எவ்வாறு வீட்டிற்கு செல்வது என யோசித்த போது திருமண வீட்டை சேர்ந்த 3 பேர் காரில் ட்ராப் செய்கிறோம் என அழைத்துள்ளனர்.

அதனை நம்பி, சகோதரிகள் இருவரும் அவர்களது காரில் ஏறி உள்ளனர். அஜய், விகாஸ் மற்றும் ஆதர்ஷ் ஆகிய மூவருடன் சகோதரிகள் மல்லிகா, அமுதா ஆகியோர் ஒரே காரில் வந்துள்ளனர். இந்த நிலையில் கார், திருமண வீட்டை தாண்டி தனியான ஆள் ஆரவம் இல்லாத சாலையில் செல்லும் போது, காரில் இருந்த 3 ஆண்களும் சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதன் காரணமாக சகோதரிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். 3 ஆண்களும் சகோதரிகளின் வாயை மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். 

இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!

அப்போது சகோதரிகள் ஓடும் காரில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்துள்ளனர். இதனா கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் ஓடி உள்ளது. கிட்டத்தட்ட 5 கி.மீ தூரம் இந்த செயல் நடந்துள்ளது. அதன் பின் கார், சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த மல்லிகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தங்கை அமுதாவிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் காரில் இருந்த மற்ற 3 ஆண்களும் காரை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கார் விபத்துக்குள்ளான சப்தம் கேட்டு ஓடிவந்து பெண்களை மீட்டுள்ளனர். பின்னர் அவர்களை மருத்துவமனை கொண்டு சென்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மல்லிகாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜய், விகாஸ் மற்றும் ஆதர்ஷ் ஆகிய மூவருக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. மூவர் மீதும் பிஎன்எஸ் பிரிவுகள் 105 (குற்றமற்ற கொலை), 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்), 75(2) (பாலியல் துன்புறுத்தல்), 115(2) (தன்னார்வமாக காயப்படுத்துதல்) மற்றும் 352(3) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பந்த்ராவின் எஸ்.எச்.ஓ ஏ.என். சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share