×
 

ஒரு வார பழக்கத்தில் மலர்ந்த காதல்.. 13 ஆண்டு திருமணத்திற்கு குட்பை.. இன்ஸ்டா காதலனுடன் ஓடிய மனைவி..!

பெங்களூருவில் திருமணம் நடந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் ஒருவாரம் பழகிய இன்ஸ்டாகிராம் காதலனுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ரூரல் ஜக்கசந்திராவில் வசிப்பவர் ரமேஷ். வயது 40. இவரது மனைவி நேத்ராவதி, வயது 35. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.  தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ் - நேத்ராவதி இருவருக்கும் பெற்றோர் இல்லை என கூறப்படுகிறது. ரமேஷின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். அதன்பின் ரமேஷை அவரது அத்தை மற்றும் மாமா ஆகியோர் வளர்த்துள்ளனர்.

அதேபோல் நேத்ராவதியும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர் தான். இவர்களின் திருமண வாழ்வு சுமூகமாக போயிக் கொண்டு இருந்தது. தம்பதி அன்யோன்யமாக இருந்தனர். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் நேத்ராவதிக்கு, இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக சந்தோஷ் என்பவர் அறிமுகமானார். இருவரும் இரவு பகலாக போனில் சேட் செய்து பழகி வந்துள்ளனர். 10 நாளிலேயே இந்த அறிமுகம், காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். 

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கணவரையும், மகனையும் தவிக்கவிட்டு நேத்ராவதி வீட்டை விட்டு வெளியேறினார். கோயில் ஒன்றில் சந்தோஷை திருமணம் செய்து கொண்டார். தன் திருமண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைக் கண்டு கணவர் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். நெலமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்ற நேத்ராவதி, கணவருடன் தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும், சந்தோஷை திருமணம் செய்து கொண்டதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், கணவர் வீட்டில் உள்ள துணிமணிகள், மற்ற பொருட்கள் வேண்டும். என் மீது முதல் கணவர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று பயமாக உள்ளது எனக் கூறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் ரமேஷின் வீட்டுக்கு வந்தார்.

இதையும் படிங்க: 18 மாதங்களாக இளம்பெண் அனுபவித்த நரகம்.. நண்பன் போல் பழகி நாசம் செய்த கயவன்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்..!

ஒரு வாரத்துக்கு முன் அறிமுகமான நபருக்காக, 13 ஆண்டுகள் வாழ்ந்த கணவரை துாக்கி எறிந்த நேத்ராவதியை, அக்கம் பக்கத்தினர் திட்டி, வசைபாடினர். அவற்றை பொருட்படுத்தாமல், நேத்ராவதி தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பாக ரமேஷ் மீது நேத்ராவதி போலிசில் புகார் அளித்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரமேஷ் தன்னை குடி போதையில் தாக்கியதாக நேத்ராவதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இவ்வாறு புகார் அளித்த ஒரு வாரத்திலேயே நேத்ராவதி மறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய கணவர் ரமேஷ், நாங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தோம். நேத்ராவதி தனது குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்தவர். நானும் என் பெற்றோரை இளம் வயதிலேயே இழந்து, என் அத்தை மற்றும் மாமாவால் வளர்க்கப்பட்டேன். எங்கள் திருமணம் உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது. 13 ஆண்டுகால வாழ்க்கை சுமூகமாக சென்றது. சுமார் 15 நாட்களுக்கு முன், நேத்ராவதி என் மீது புகார் அளித்திருந்தார். என்னை வீட்டை விட்டு வெளியேற்றினாள்.

எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க காவல்துறை அவளுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்தது. என் மீது புகார் அளித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு உள்ளாள். எங்கள் மகனை எங்கே வைத்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

மேலும், நேத்ராவதியின் தந்தையிடமிருந்து ஒரு பங்கு விவசாய நிலம் நேத்ராவதிக்கு கிடைத்தது. அதை நான் அவள் பெயரில் பதிவு செய்தேன். அவள் அந்த நிலத்தை அடமானம் வைத்து தான் வேறொருவரை மணந்துள்ளாள். நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம். நிலத்தின் மீது கண் வைத்து தான் மற்றொருவன் இந்த திருமணத்தை செய்துள்ளான் என்று அவர் கூறினார். ரமேஷின் அத்தை தாயம்மா, “அவள் என் மகனை ஏமாற்றி, அவளுடைய இன்ஸ்டாகிராம் காதலனை மணந்துவிட்டாள். அது அவளுடைய விருப்பம்.

அவள் என்றும் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. எங்களது பேரன் எங்கே இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுக்கு முறைகேடான உறவுகள் இருந்ததாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று சொன்னார். 
 

இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share