சிறுத்தை தாக்கி பெண் பலி.. வனத்துறையினர் விசாரணை!
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பேரார் பொம்மன் என்னும் மலைக்கிராமத்தில் கோபால் அஞ்சலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அப்போது அஞ்சலையம்மாள் நேற்று முன் தினம் காலிபெட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலையம்மாள் வீடு திரும்பாததால், அச்சமடைந்த கோபால் அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தேடியுள்ளார். ஆனால் எங்க தேடியும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலையில் காலிபெட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தின் ஓரிடத்தில் பெண் சடலம் ஒன்று கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கை கால் என உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனை போல் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பெண்கள் 2 குழந்தைகளை பெத்துக்கணும்... சந்திரபாபு நாயுடு 'ஜோக்'கால் சட்டசபையில் சிரிப்பலை..!
முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காயங்கள் மற்றும் தலைகளை வைத்து பார்க்கையில், தேயிலை பறித்துக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!