நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!
உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு பிறகும் காதலனை மறக்க முடியாமல் தவித்த இளம்பெண், கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பிரகதி யாதவ். (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான அனுராக் யாதவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பல இடங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பிரகதியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே பிரகதிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். கடந்த 5-ம் தேதி பிரகதியை அதே பகுதியை சேர்ந்த 26 வயதான திலிப் என்பவருக்கு திருமணம் பிரகதியை செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகும் பிரகதியால் அவருடைய காதலனை மறக்க முடியவில்லை. எப்படியாவது கதலனுடன் மீண்டும் சேர வேண்டுமென பிரகதி திட்டம் தீட்டினார். கணவர் திலீப் இறந்து விட்டால் மீண்டும் காதலருடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என பிரகதி நினைத்தார். யாருக்கும் தெரியாமல் அவருடைய காதலன் அனுராக் யாதவிடம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார்.
திலீப்பை கொலை செய்து விடலாம் என காதலன் அனுராக் யாதவிடம் பிரகதி தெரிவித்தார். இருவரும் சேர்ந்து கூலிப்படையை சேர்ந்த ராமாஜி என்பவரை தொடர்பு கொண்டார். அவர் திலீப்பை கொலை செய்ய ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி பிரகதியும் ரூ.2 லட்சம் கொடுத்தார்.
இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் குஷியோ குஷி... 2 பாட்டில் வாங்கினால் 1 இலவசம்..! பழைய ஸ்டாக்கை காலி செய்ய விற்பனை..!
கடந்த 19-ம் தேதி ராமாஜி அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்த திலீப்பை மடக்கி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் திலீப்பை கைதுப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலீப் சரிந்து விழுந்தார். உடல் முழுவதும் ரத்த காயங்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டபடி திலிப் துடிதுடித்து கொண்டிருந்தார்.
கூலிப்படையினர் அவரை அங்குள்ள விவசாய நிலத்தில் தூக்கிவீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலீப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திலீப்பை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி முடிந்த பின்னர் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபக் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கூலிப்படை தலைவன் ராமாஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தனித்துவமான விசாரணையில் அனைத்து திட்டத்தையும் ராமாஜி உளறிக்கொட்டினார். அதன் பேரில் பிரகதி அவருடைய காதலன் அனுராக் யாதவ், கூலிப்படை தலைவன் ராமாஜி ஆகிய3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை பயன்படுத்திய 2 துப்பாக்கி, 4 தோட்டா, ஒரு பைக், 2 செல்போன்கள் மற்றும் ஒரு ஆதார் அட்டை, ரூ,3000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் எந்த தவறூம் செய்யாத கணவரை கூலிப்படை ஏவி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..! 80 வயது முதியவர் கைது..!