×
 

மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!

மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு பதிவு கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பெண்களின் சொத்துரிமையை உறுதி செய்யும் நோக்கத்தை வீடு மற்றும் மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்யும்போது பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 14ஆம் தேதி சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெண்கள் உரிமையை பாதுகாக்கும் வகையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பெண்கள் பெயரை பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு ஒரு சதவீதம் கட்டண குறைப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது.

இதையும் படிங்க: சீனாவின் ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்ததா தமிழ்நாடு..? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி..!

அதன்படி பெண்கள் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் 10 லட்ச ரூபாய் மதிப்பிற்குள் பதிவு செய்யப்படும்போது வழக்கமான பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் ஒன்று முதல் அதாவது நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.இதற்கான அரசாணையை பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதன் மதிப்பில் ஏழு சதவீதத்தை, முத்திரை தீர்வையாகவும், 2 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும், செலுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தின் மூலம், தற்போதைய நிலைமையில் மேற்கொள்ளப்படும் பதிவுகளில் சுமார் 75% வரையிலான பதிவு மாறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.  

இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் தமிழ்நாடு முத்திரைச் சட்டம், 2019ன் படி, ஒரு சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடும் போதெல்லாம், வீடு வாங்குபவர் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். சொத்தை பிரித்தல், குத்தகை, விற்பனை மற்றும் மறுவிற்பனை ஆகியவற்றின் போது, முத்திரை வரி செலுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவு கட்டண குறைப்பு நடைமுறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! தடை செய்வதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ரோஸ்ட் செய்யும் அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share