×
 

“ஆடையைக் கிழிச்சி அடிச்சாங்க”... விசிக நிர்வாகியை டேமெஜ் செய்ய முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் - பரபரப்பு காரணம்..! 

விசிக நிர்வாகி  தாக்கியதாக புகார் கூறி நாடகம் ஆடிய போலீஸ் பெண் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விசிக நிர்வாகி  தாக்கியதாக புகார் கூறி நாடகம் ஆடிய போலீஸ் பெண் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில்  சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். 

மேலும் அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். 

இதையும் படிங்க: இந்துக்களை எச்சரித்த திருமா... மதுரை மாவட்ட ஆட்சியர் மீது பகீர் குற்றச்சாட்டு...! 

இதனிடையே,  காவல்நிலைய சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு, பணியில் இருந்த போலீஸார், மருத்துவமனையில் இருந்த  மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியதில், சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது உண்மைக்கு புரம்பானது என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது.

இந்நிலையில் சப்  இன்ஸ்பெக்டர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டெல்லியில் பாஜக மாபெரும் எழுச்சி..! இந்தியா கூட்டணி மீது திருமாவளவன் அதிர்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share